நிதியை விடுவிக்க ரூ.30 ஆயிரம் லஞ்சம்: மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் கைது
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், அரசு நிதியை விடுவிக்க ரூ.30 ஆயிரம் லஞ்சம் பெற்ற மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் கைது செய்யப்பட்டார்.


தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், அரசு நிதியை விடுவிக்க ரூ.30 ஆயிரம் லஞ்சம் பெற்ற மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் கைது செய்யப்பட்டார்.
தூத்துக்குடி மாவட்டம் சாயர்புரத்தில் உள்ள செயிண்ட் ரெசண்ட் மனவளர்ச்சி குன்றியோர் பள்ளிக்கு அரசு நிதி ஒதுக்கீடாக ரூ.9.89 லட்சம் வழங்கப்பட்டுள்ளது. அதற்கான காசோலை தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட மாற்றுத் திறனாளிகள் அலுவலகத்தில் சேர்ந்துள்ளது. இதனை அப்பள்ளிக்கு வழங்க மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் சேகர் ரூ. 1 லட்சம் லஞ்சமாகக் கேட்டுள்ளார். ஆனால், பேரம் பேசப்பட்டு, ரூ.30 ஆயிரத்துக்கு ஒப்புக் கொண்டு, அதனைத் தர தயாராகியுள்ளார் பள்ளியின் தலைமை ஆசிரியர் ஜெயக்குமார்.
இருப்பினும், அவர் அளித்த புகாரின் பேரில், தூத்துக்குடி ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸார் பின் தொடர்ந்தனர்.
ஜெயக்குமார் ரூ.30ஆயிரத்தை சேகரிடம் வழங்கியபோது, அவரை போலீசார் கைது செய்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...