இயக்குநர் தக்காளி சீனிவாசன் காலமானார்!எரிவாயு தட்டுப்பாடு எதிரொலி: எல்பிஜி உற்பத்தியை அதிகரிக்கிறோம் - ரிலையன்ஸ் 2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்திமுக, அதிமுக இல்லாத கூட்டணி? ராமதாஸுடன் சசிகலா சந்திப்பு2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்நாட்டின் கோதுமை உற்பத்தி 2% அதிகரிப்பு! 120 மில்லியன் டன் - மத்திய அரசுசௌதிக்குச் செல்ல மேற்காசியாவில் உள்ள நேபாள மக்களுக்கு அந்நாட்டு அரசு அறிவுறுத்தல்இண்டிகோ விமான நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பீட்டர்ஸ் எல்பர்ஸ் ராஜிநாமாபாகிஸ்தானில் அறிமுகமாகும் 5ஜி: அலைக்கற்றை ஏலம் முடிந்தது!
/

காசநோய் மருத்துவமனைக்கு ரூ.75 ஆயிரம் நிதி வசூலித்து வழங்கிய சிதம்பரம் பள்ளி மாணவர்கள்!

மும்பையை தலைமையிடமாக கொண்ட இந்தியன் டெவலப்மெண்ட் பவுண்டேஷன் என்ற நிறுவனம் காசநோய் மற்றும் தொழுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்திய அளவில் பல்வேறு கிளைகளை கொண்டு 17 மருத்துவமனைகளை நிறுவி சேவை செய்து வருகிறது. ஆண்டு தோறும் இம்மருத்துவமனைக்கு சிதம்பரம்

News image
Updated On :13 ஏப்ரல் 2013, 11:08 am

G.Sundararaj

காசநோய் மருத்துவமனைக்கு சிதம்பரம் ராணி சீதை ஆச்சி மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவியர்கள் ரூ.75 நிதியினை வசூலித்து வழங்கியுள்ளனர்.

மும்பையை தலைமையிடமாக கொண்ட இந்தியன் டெவலப்மெண்ட் பவுண்டேஷன் என்ற நிறுவனம் காசநோய் மற்றும் தொழுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்திய அளவில் பல்வேறு கிளைகளை கொண்டு 17 மருத்துவமனைகளை நிறுவி சேவை செய்து வருகிறது. ஆண்டு தோறும் இம்மருத்துவமனைக்கு சிதம்பரம் அண்ணாமலைநகர் ராணி சீதை ஆச்சி மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவியர்கள் நிதிதிரட்டி வழங்கி வருகின்றனர்.

இந்த ஆண்டு சிதம்பரம் அண்ணாமலைநகர் ராணி சீதை ஆச்சி மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவியர்கள் ரூ.75 ஆயிரம் நிதியினை திரட்டி வழங்கியுள்ளனர். இதில் பளளியில் பயிலும் 11-ம் வகுப்பு மாணவி ஷைலோ ஜெசி பிரான்சிஸ்கா மட்டும் ரூ.38 ஆயிரத்தை சேமித்து வழங்கியுள்ளார் என்பதும், இதுவரை இப்பள்ளி மாணவ, மாணவியர்கள் ரூ.11 லட்சம் நிதியை திரட்டி வழங்கியுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாணவர்கள் திரட்டிய நிதி ரூ.75 ஆயிரத்தை தலைமை ஆசிரியர் ஆர்.தர்பாரண்யன், இந்தியன் டெவல்ப்மெண்ட் பவுண்டேஷன் நிறுவன தென் மண்டல மேலாளர் ஸ்ரீராமிடம் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் பெற்றோர்-ஆசிரியர் கழகத் தலைவர் ஆசிர்ரவிச்சந்திரன் மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள் பங்கேற்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.