/

அமைச்சருடன் சென்ற கார் மோதி ஒருவர் பலி: சாலைமறியல்

தூத்துக்குடி அருகே வாகைகுளம் என்ற இடத்தில் அமைச்சருடன் சென்ற கார் மோதி ஒருவர் பலியானார். இதை அடுத்து அங்கே சாலைமறியலில் பொதுமக்கள் ஈடுபட்டனர்.

News image
Updated On :13 ஏப்ரல் 2013, 9:09 am

இன்பராஜ்

தூத்துக்குடி அருகே வாகைகுளம் என்ற இடத்தில் அமைச்சருடன் சென்ற கார் மோதி ஒருவர் பலியானார். இதை அடுத்து அங்கே சாலைமறியலில் பொதுமக்கள் ஈடுபட்டனர்.

தூத்துக்குடியில் ஒரு நிகழ்ச்சிக்காக வந்துவிட்டு தென்காசியில் நடைபெறும் ஒரு நிகழ்ச்சிக்குச் சென்றார் தமிழக அமைச்சர் சித. செல்லப்பாண்டியன். அவருடைய காருக்குப் பின்னால்  ஆழ்வார்திருநகரி ஒன்றிய தலைவர் விஜயகுமாரின் காரும் சென்றது. அந்தக் காரில் விஜயகுமார் இல்லை. இந்தக் கார் வாகைகுளம் பகுதிக்குச் சென்றபோது, சாலையில் அந்த ஊரைச் சேர்ந்த ஒருவர் மீது மோதி அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதை அடுத்து ஆத்திரமடைந்த பொதுமக்கள் அந்தக் காரை வழிமறித்து, சாலைமறியலில் ஈடுபட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.