/

இளைஞர் கொலை வழக்கில் 4 பேருக்கு ஆயுள் தண்டனை

தூத்துக்குடி மாவட்டம், ஏரல் அருகேயுள்ள அகரம் கிராமத்தைச் சேர்ந்த தங்கபாண்டி மகன் ஞானசுந்தர் (27), இவர் தனது நண்பருடன் 4.7.2010 அன்று அந்தப் பகுதியில் உள்ள கோயில் முன்பு பேசிக் கொண்டிருந்தார். அப்போது,

News image
Updated On :15 ஏப்ரல் 2013, 1:16 pm

இன்பராஜ்

தூத்துக்குடி அருகே இளைஞரை கொலை செய்த வழக்கில் நால்வருக்கு ஆயுள் தண்டனை விதித்து தூத்துக்குடி நீதிமன்றத்தில் தீர்ப்பளிக்கப்பட்டது.

தூத்துக்குடி மாவட்டம், ஏரல் அருகேயுள்ள அகரம் கிராமத்தைச் சேர்ந்த தங்கபாண்டி மகன் ஞானசுந்தர் (27), இவர் தனது நண்பருடன் 4.7.2010 அன்று அந்தப் பகுதியில் உள்ள கோயில் முன்பு பேசிக் கொண்டிருந்தார். அப்போது, அதே பகுதியைச் சேர்ந்த சிலர் ஞானசுந்தரை அரிவாளால் வெட்டி கொலை செய்தனர். அதேபகுதியில் உள்ள ஒரு தோட்டத்தில் வேலைபார்ப்பது தொடர்பாக ஞானசுந்தருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த சிலருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்ததாக் கூறப்படுகிறது.இதுகுறித்து வழக்குப் பதிந்த ஏரல் போலீஸார் அகரம் கிராமத்தைச் சேர்ந்த வீரசங்கிலி மகன் முத்துலிங்கம் (35), நயினார் மகன் சுயம்புலிங்கம் (27), ஆழ்வார்திருநகரியைச் சேர்ந்த மாயான்டி மகன் அரிஹரபாலன் (21), அழகுமுத்து மகன் முருகன் (21) ஆகிய 4 பேரையும் கைது செய்தனர்.

இந்த வழக்கு விசாரணை தூத்துக்குடி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி பிரபுதாஸ் குற்றம்சாட்டப்பட்ட நால்வருக்கும் ஆயுள் தண்டனையும், முத்துலிங்கத்துக்கு ரூ.1200-ம், சுயம்புலிங்கத்துக்கு ரூ.1500-ம், மற்ற இருவருக்கும் தலா ஆயிரமும் அபாரதம் விதிக்கப்பட்டது.நால்வருக்கும் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது பற்றிய அறிவிப்பு வெளியானதும் நீதிமன்ற வளாகத்தில் நின்ற உறவிர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீஸார் அனைவரையும் சமரசம் செய்து அனுப்பி வைத்தனர். பின்னர், தண்டனை விதிக்கப்பட்ட நால்வரும் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.      

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.