சிதம்பரத்தில் ஸ்ரீகோதண்டராமர் கோயில் தேரோட்டம்!
ஸ்ரீகோதண்டராமர் கோயில் பிரம்மோற்சவம் கடந்த ஏப்.11-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி தினமும் உற்சவமும், சுவாமி வீதிஉலா நிகழ்ச்சியும் நடைபெற்று வருகிறது. 9-ம் நாள் உற்சவமான தேரோட்டம்
.jpg?w=1200&auto=format%2Ccompress&fit=max)
.jpg?w=1200&auto=format%2Ccompress&fit=max)
சிதம்பரம் மேலரதவீதியில் உள்ள ஸ்ரீகோதண்டராமர் கோயில் பிரம்மோற்சவத்தை முன்னிட்டு தேரோட்டம் வெகு சிறப்பாக நடைபெற்றது.
ஸ்ரீகோதண்டராமர் கோயில் பிரம்மோற்சவம் கடந்த ஏப்.11-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி தினமும் உற்சவமும், சுவாமி வீதிஉலா நிகழ்ச்சியும் நடைபெற்று வருகிறது. 9-ம் நாள் உற்சவமான தேரோட்டம் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. காலை 5.30 மணிக்கு ஸ்ரீராமர், ஸ்ரீலட்சுமணன், சீதா, ஆஞ்சநேயர் ஆகியோர் தேரில் எழுந்தருளினர். பின்னர் தேர் வடக்குரதவீதி, கீழரதவீதி, தெற்குரதவீதி வழியாக மேலரதவீதி கோயில் வளாகத்தை சென்றடைந்தது. திரளான பக்தர்கள் பங்கேற்று வடம் பிடித்து தேர் இழுத்தனர். வெள்ளிக்கிழமை இரவு சீதா கல்யாணம் நிகழ்ச்சி நடைபெற்றது. நாளை(சனிக்கிழமை) புஷ்பபல்லக்கு உற்சவத்துடன் பிரம்மோற்சவம் முடிவடைகிறது. உற்சவ ஏற்பாடுகளை கோயில் டிரஸ்டிக்கள் ஸ்ரீதிருவேங்கடம், வி.ஆர்.கிருஷ்ணமாச்சாரி, சுதர்சணாச்சாரி ஆகியோர் செய்திருந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...