அந்த கடிதத்தில் கடலூர் மாவட்டம் சிதம்பரம் பகுதியில் தொடர் திருட்டு, வழிப்பறி, கொலை, கொள்ளை போன்ற சம்பவங்கள் நாளுக்கு, நாள் அதிகரித்து பொதுமக்கள் அச்சமும், பீதியும் அடைந்து வருகின்றனர். தொடர் சம்பவங்கள் குறித்து காவல்துறையினர் போதிய கவனத்துடன் நடவடிக்கை மேற்கொள்ளவில்லை. காவல்துறை அதிகாரிகளின் மெத்தனப் போக்கால் சமூக விரோத நடவடிக்கைகள் அதிகரி்த்துக் கொண்டே வருகின்றன. இச்சம்பவங்களுக்கு காவல்துறை உதவி கண்காணிப்பாளராக உள்ள துரை ஐபிஎஸ்ஸின் செயல்பாடின்மையே முக்கிய காரணம் என்ற புகார் குறித்தும் உரிய விசாரணை நடத்திட வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.