அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

சிதம்பரத்தில் உமாபதிசிவம் திருநட்சத்திர குருபூஜை விழா

சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயிலில் தரிசன திருவிழாவிற்காக முதல்நாள் கொடியேற்றுவது வழக்கம். கிபி 1310-ல் ஒருமுறை மார்கழி திருவிழாவின் போது கொடியேற்றம் அன்று தில்லைவாழ் அந்தனரான உமாபதி

News image
Updated On :24 ஏப்ரல் 2013, 10:18 am

G.Sundararaj

சிதம்பரம் கொற்றவன்குடிதோப்பில் அமைந்துள்ள மடலாயத்தில் உமாபதி சிவாச்சாரியார் சுவாமிகளின் திருநட்சத்திர குருபூஜை விழா வெகுசிறப்பாக நடைபெற்றது.

சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயிலில் தரிசன திருவிழாவிற்காக முதல்நாள் கொடியேற்றுவது வழக்கம். கிபி 1310-ல் ஒருமுறை மார்கழி திருவிழாவின் போது கொடியேற்றம் அன்று தில்லைவாழ் அந்தனரான உமாபதி சிவாச்சாரியார் தனது குருவான மறைஞான சம்பந்தரின் சேடப்பிரசாதத்தை ஏற்றுக் கொண்டதால் அவரை திருக்கோயில் முறையிலிருந்து நீக்கிவிட்டனர். இதனால் தீட்சிதர்கள் வேறு ஒருவரை கொண்டு கொடியேற்ற முற்பட்டனர். ஆனால் கொடி ஏறவில்லை. அப்போது "யாம் இங்கில்லை, உமாபதி பூசை பெட்டகத்தில் இருக்கின்றோம்" என அசரிரீ கேட்டது. உடனே அனைவரும் கொற்றவன்குடி உமாபதிசிவம் மடத்திற்கு சென்று அவரிடம் நடந்தவற்றை கூறி உமாபதிசிவத்தை பூசை பெட்டகத்துடன் பல்லக்கில் அழைத்து வந்து கோயிலில் எழுந்தருளியனர். அங்கு உமாபதிசிவம் நடராஜப் பெருமானை வழிபட்டு கொடிமரத்தின் அருகே நின்று கொடிகவி பாடிய போது கொடி தானாக ஏறியதாக வரலாறு கூறுகிறது.

அச்சிறப்புவாய்ந்த உமாபதி சிவாச்சாரியாரின் திருநட்சத்திர குருபூஜை விழா நடைபெற்றது. உமாபதிசிவம் மடாலயத்தில் வீற்றுள்ள உமாபதி சிவாச்சாரியார் சுவாமிகளுக்கு திருமுறை விண்ணப்பம், திருமுறை முற்றோதல், மகாபிஷேகம், மகா தீபாராதனை, மகேஸ்வரபூஜை ஆகியவை வெகுசிறப்பாக நடைபெற்றது. திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசித்தனர். இந்நிகழ்ச்சிக்கு விருத்தாசலம் குமாரத்தேவர் மடம் 23-வது குருமகாசந்நிதானம் கல்யாணசுந்தர சிவப்பிரகாச பரமாச்சார்ய சுவாமிகள் தலைமை வகித்தார். சிதம்பரம் மெளனமடாலய மடாதிபதி ஸ்ரீசுந்தரமூர்த்திசுவாமிகள் முன்னிலை வகித்தார்.  நெய்வேலி முனைவர் இளையஞானி,  அண்ணாமலைப் பல்கலை. நூலகர் ஆறு.வீரப்பனார்,  வி.எஸ்.டிரஸ்ட் மேலாளர் கு.சேதுசுப்பிரமணியன்,  சைவசித்தாந்த வகுப்பு அமைப்பாளர் சீனுஅருணாசலம், ஏ.பி.ஆர்.சரவணன், சிவத்திரு அ.நடராஜன் உள்ளிட்டோர் பங்கேற்று கருத்துரையாற்றினர்.  மதியம் சிவனடியார்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.