அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

குப்பையில் கிடந்த வெடிகள் வெடித்ததில் 3 சிறுவர்கள் படுகாயம்!

சிதம்பரம் அருகே உள்ள பரங்கிப்பேட்டை புதுகுப்பத்தில் முத்தாளம்மன்கோயில் உள்ளது. இக்கோயிலில் நடைபெற்ற கடந்த 2 தினங்களாக திருவிழா வானவேடிக்கை மற்றும் வெடிகள் வெடித்து கொண்டாடப்பட்டன.

News image
Updated On :27 ஏப்ரல் 2013, 12:54 pm

G.Sundararaj

சிதம்பரம் அருகே குப்பையில் கிடந்த வெடிகளை சேகரித்து கொளுத்திய போது வெடித்து 3 சிறுவர்கள் படுகாயம் அடைந்தனர்.

சிதம்பரம் அருகே உள்ள பரங்கிப்பேட்டை புதுகுப்பத்தில் முத்தாளம்மன்கோயில் உள்ளது. இக்கோயிலில் நடைபெற்ற கடந்த 2 தினங்களாக திருவிழா வானவேடிக்கை மற்றும் வெடிகள் வெடித்து கொண்டாடப்பட்டன. இந்நிலையில் இன்று அப்பகுதியைச் சேர்ந்த பாலமுருகன் என்பவரது மகன்கள் சசிக்குமார் (11), பிரவீன்குமார் (9), நாகராஜன் மகன் நவீன்குமார் (7) உள்ளிட்ட சிறுவர்கள் அங்கு குப்பையில் கிடந்த வெடிகளை சேகரித்து தீ வைத்து கொளுத்தியுள்ளனர்.

அப்போது அதிலிருந்து வெடிக்காத வெடிகள் சரமாரியாக வெடித்தத்தில் மூவரும் படுகாயம் அடைந்து பரங்கிப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். இதில் சிறுவன் நவீன்குமார் கவலைக்கிடமான நிலையில் புதுச்சேரி மகாத்மாகாந்தி மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, அங்கு அச்சிறுவனக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.