அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

அண்ணாமலைப் பல்கலைக்கழகம் ஒர் அறிவுக்கோயிலாக திகழ்கிறது: நாக.முருகுமாறன் எம்எல்ஏ

அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் நூலகம் சிறப்பாக உள்ளது. தமிழகத்தில் வேறு எந்த பல்கலைக்கழகத்திலும் இதுபோன்ற பெரிய நூலகத்தை பார்க்க முடியாது. மாணவர்கள் இந்த நூலகத்தை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அண்ணாமலைப் பல்கலைக்கழக மாணவர்கள் ஆட்சிதலைவர்களாக,

News image
Updated On :28 ஏப்ரல் 2013, 1:26 pm

G.Sundararaj

சாதி, மதங்களை தாண்டி அண்ணாமலைப் பல்கலைக்கழக ஒர் அறிவுக்கோயிலாக திகழ்கிறது என காட்டுமன்னார்கோயில் சட்டப்பேரவை உறுப்பினர் கே.நாகமுருகுமாறன் தெரிவித்தார்.

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக வேளாண் கல்லூரி ஆண்டு விழா பல்கலைக்கழக சாஸ்திரி ஹாலில் நடைபெற்றது. வேளாண்புல முதல்வர் பேராசிரியர் ஆர்.எம்.கதிரேசன் தலைமை வகித்துப் பேசினார்.  வேளாண்கழகம் துணைத் தலைவர் பேராசிரியர் என்.ராமநாதன் வரவேற்றார்.  பொதுச்செயலாளரும், மாணவருமான கே.ஆதிரா ஆண்டறிக்கை படித்தார். காட்டுமன்னார்கோயில் சட்டப்பேரவை உறுப்பினரும், வேளாண்புல முன்னாள் மாணவருமான நாக.முருகுமாறன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசினார்.அவர் பேசியதாவது:

அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் நூலகம் சிறப்பாக உள்ளது. தமிழகத்தில் வேறு எந்த பல்கலைக்கழகத்திலும் இதுபோன்ற பெரிய நூலகத்தை பார்க்க முடியாது. மாணவர்கள் இந்த நூலகத்தை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அண்ணாமலைப் பல்கலைக்கழக மாணவர்கள் ஆட்சிதலைவர்களாக, காவல்துறை கண்காணிப்பாளர்களாக, மத்திய, மாநில அரசுகளில் பல்வேறு துறைகளில் உயர் பொறுப்புகளில் இருக்கின்றனர். இன்று வேளாண் அறிவியல் படித்தவ மாணவர்களின் எண்ணிக்கை மிக அதிகம்.

ஆனால் வேளாண் அலுவலர்கள் பணியிடம் குறைவாக உள்ளது. வேலைவாய்ப்பும் குறைவாக உள்ளது. எனவே இதனை அடிப்படையாக கொண்டு மாணவர்கள் வேளாண்துறைக்கு மட்டும் செல்லாமல், பல்வேறு போட்டித் தேர்வுகளை எழுதி தங்களது விருப்பமான துறையில் பணியில் சேரலாம்.  ஆசிரியர்களுடன் மாணவர்கள் இனக்கமான உறவு வைத்துக் கொள்ள வேண்டும். இதன் மூலம் பல்வேறு வாய்ப்புகளை மாணவர்கள் தெரிந்து கொண்டு எதிர்காலத்தில் சிறப்பாக பணியாற்ற முடியும் என நாக.முருகுமாறன் எம்எல்ஏ தெரிவித்தார்.

விழாவில் தோட்டக்கலைத்துறை தலைவர் பேராசிரியர் மணிவண்ணன், வேளாண் பொருளியல் துறை பேராசிரியர் சுந்தரவரதராஜன், மண் அறிவியல்துறைத் தலைவர் ரவிச்சந்திரன்,  முன்னாள் பேராசிரியர் பன்னீர்செல்வம், கோவிந்தசாமி, ராமானுஜம்,  உதவிப் பேராசிரியர் தி.ராஜ்பிரவீன், என்எஸ்எஸ் திட்ட ஒருங்கிணைப்பாளர் டி.ஆர்.ஜெயராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.முடிவில் வேளாண் கழக பொருளாளர் ஆர்.ஜெயா நன்றி கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.