அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

ஸ்ரீவீரநாராயணப் பெருமாள் கோயில் தெப்ப உற்சவம்!

காட்டுமன்னார்கோயிலில் அமைந்துள்ள ஸ்ரீவீரநாராயணப் பெருமாள் கோயில் பிரம்மோற்சவம் கடந்த ஏப்.17-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. உற்சவத்தை முன்னிட்டு ஏப்.25-ம் தேதி தேர் திருவிழா

News image
Updated On :29 ஏப்ரல் 2013, 11:45 am

G.Sundararaj

காட்டுமன்னார்கோயில் ஸ்ரீவீரநாராயணப் பெருமாள் கோயில் பிரம்மோற்சவத்தை முன்னிட்டு தெப்ப உற்சவம் வெகுசிறப்பாக நடைபெற்றது.

காட்டுமன்னார்கோயிலில் அமைந்துள்ள ஸ்ரீவீரநாராயணப் பெருமாள் கோயில் பிரம்மோற்சவம் கடந்த ஏப்.17-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. உற்சவத்தை முன்னிட்டு ஏப்.25-ம் தேதி தேர் திருவிழா நடைபெற்றது. ஏப்.28-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை வேதபுஷ்கரணி குளத்தில் இரவு 10 மணிக்கு தெப்ப உற்சவம் வெகு சிறப்பாக நடைபெற்றது. ருக்குமணி, சத்யபாமா சமேத ஸ்ரீராஜகோபாலசுவாமி, நாதமுனிகள் ஆகியோர் தெப்பத்தில் எழுந்தருளினர். திருக்குளத்தில் சுவாமிகள் தெப்பத்தில் மூன்று சுற்று, சுற்றி வலம் வந்தனர். பின்னர் இன்று காலை கோயிலுக்கு புறப்பட்டுச் சென்றனர்.

தெப்ப உற்சவத்தில் கடலூர் மேற்கு மாவட்ட அதிமுக செயலாளர் ஏ.அருண்மொழிதேவன், நாக,முருகுமாறன் எம்எல்ஏ, ஒன்றியச் செயலாளர் பாலதுரைபாண்டியன், காட்டுமன்னார்கோயில் ஒன்றியக்குழுத் தலைவர் எம்.கே.மணிகண்டன்,பேரூராட்சி தலைவர் எம்ஜிஆர்.தாசன், குமராட்சி ஒன்றியக்குழுத் தலைவர் கே.ஏ.பாண்டியன் மற்றும் திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசித்தனர். விழா ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை செயல்அலுவலர் ப.வெங்கடகிருஷ்ணன், முன்னாள் அறங்காவலர் குழுத்தலைவர் எஸ்.என்.தோத்தாத்திரி உள்ளிட்டோர் விழா ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.