அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

சிதம்பரம் அருகே 40 பவுன் நகைகள் திருட்டு! தம்பி கைது, நகைகள் மீட்பு

புவனகிரி காவல் நிலையத்தின் எதிரில் உள்ள வீட்டில் வசித்து வருபவர் பிரேமநாதன் (62). வீட்டின் முன்புற பகுதியில் பெட்டிக்கடை வைத்து நடத்தி வருகிறார். அதே வீட்டில் மற்றொரு பகுதியில் இவரது தம்பி முரளிதாஸ் தனது

News image
Updated On :30 ஏப்ரல் 2013, 10:55 am

G.Sundararaj

சிதம்பரம் அருகே உள்ள புவனகிரி காவல் நிலையத்தின் அருகே வீடு புகுந்து 40 பவுன் நகைகள் திருடு போனது. புவனகிரி போலீஸார் நகைகளை திருடிய தம்பியை கைது செய்து நகைகளை மீட்டனர்.

புவனகிரி காவல் நிலையத்தின் எதிரில் உள்ள வீட்டில் வசித்து வருபவர் பிரேமநாதன் (62). வீட்டின் முன்புற பகுதியில் பெட்டிக்கடை வைத்து நடத்தி வருகிறார். அதே வீட்டில் மற்றொரு பகுதியில் இவரது தம்பி முரளிதாஸ் தனது மனைவியுடன் வசித்து வருகிறார். முரளிதாஸ் கடந்த ஒருமாதமாக கடன் தொல்லையால் வெளியூரில் வசித்து வந்ததாகக் கூறப்படுகிறது.  இந்நிலையில் அண்ணன் பிரேமநாதன் குடும்பத்துடன், முரளிதாஸ் மனைவியையும் அழைத்துக் கொண்டு திங்கள்கிழமை காலை கீரப்பாளையம் அருகே உள்ள வடப்பாக்கத்தில் உள்ள குலதெய்வம் கோயிலுக்கு சென்று மாலை வீடு திரும்பினார். அப்போது வீட்டின் பூட்டை உடைத்து வீட்டிற்குள் புகுந்து பீரோவிலிருந்த 40 பவுன் நகைகள், ரூ.25 ஆயிரம் ரொக்கம் மற்றும் வெள்ளிப் பொருள்களை திருடிச் சென்றது தெரியவந்து அதிர்ச்சியுற்றார். திருடு போன பொருள்களின் மதிப்பு ரூ.8 லட்சமாகும்.

இதுகுறித்து புகாரின் பேரில் புவனகிரி போலீஸார் விசாரணை மேற்கொண்டனர். போலீஸார் சந்தேகத்தின் பேரில் செல்போன் மூலம் தம்பி முரளிதாஸை தொடர்பு கொண்டு வரவழைத்து விசாரணை நடத்தினர். விசாரணையில் பாகம் பிரிக்காததாலும், கடன் தொல்லை தாங்க முடியாமல் நகைகள் மற்றும் ரொக்கத்தை திருடியதை முரளிதாஸ் ஒப்புக்கொண்டார். அதன் பேரில் போலீஸார் தம்பி முரளிதாஸை கைது செய்து, நகைகளை மீட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.