கடையம் அருகே சிறுத்தைப்புலி அட்டகாசம்: கால்நடைகளை அடித்து கொன்றது
திருநெல்வேலி மாவட்டத்தில் மேற்குத் தொடர்ச்சி மலையில் திருக்குறுங்குடி முதல் கடையம் வரை 895 சதுர கி.மீ பரப்பளவில் களக்காடு முண்டன்துறை புலிகள் காப்பகம் அமைந்துள்ளது. இக்காப்பகம்


திருநெல்வேலி மாவட்டம், கடையம் அருகேமலையடிவாரக் கிராமங்களில் சிறுத்தைப்புலி அட்டகாசம் செய்து ஆடு, நாய்போன்ற கால்நடைகளை அடித்து கொன்றது. இதனால் பொதுமக்கள் அச்சத்தில்உள்ளனர்.
திருநெல்வேலி மாவட்டத்தில் மேற்குத் தொடர்ச்சி மலையில் திருக்குறுங்குடி முதல் கடையம் வரை 895 சதுர கி.மீ பரப்பளவில் களக்காடு முண்டன்துறை புலிகள் காப்பகம் அமைந்துள்ளது. இக்காப்பகம் பல்லுயிர் பெருக்கத்திற்கு புகழ் பெற்றது. புலி, சிறுத்தை, யானை, மிளா, மான் போன்ற அரிய வகை விலங்கினங்களும், தாவர வகைகளும் உள்ளன.
புலிகள் காப்பகத்தில் கடையம் அருகே சிவசைலம், வி.கே. புரம் அருகே திருப்பதியாபுரம், அனவன் குடியிருப்பு, ஆலடியூர், களக்காடு அருகே பூதத்தான் குடியிருப்பு உள்ளிட்ட மலையடிவாரக் கிராமங்களில் வனவிலங்குகள் அட்டகாசம் இருந்து வருகிறது. அவ்வப்போது சிறுத்தைப்புலி அட்டகாசம் செய்து கால்நடைகளை அடித்து கொன்று வருவதுண்டு.மலையடிவாரக் கிராமங்களில் காட்டுப்பன்றி, மிளா போன்ற விலங்குகள் அட்டகாசம் செய்து விளைப் பொருட்களை சேதப்படுத்தி வருகிறது. இதனிடையேகடந்த 2 தினங்களாக கடையம் அருகே பெத்தான்பிள்ளை குடியிருப்பு பகுதியில் சிறுத்தைப்புலி அட்டகாசம் செய்து வருகிறது.
சிறுத்தைப் புலி நாய், ஆட்டுக் குட்டி, கன்றுக் குட்டிகளை அடித்து கொன்று இறையாக்கி வருவதாக அப்பகுதி பொதுமக்கள் தெரிவித்தனர். கடந்த சில தினங்களாக பெத்தான்பிள்ளைக் குடியிருப்பு பகுதியில் இரவு நேரங்களில் மின்சாரம் விநியோகம் இல்லாமல் அக்கிராமம் இருளில் மூழ்கி காணப்படுகிறது.சிறுத்தைப்புலி அட்டகாசம் செய்து வருவதால் அப்பகுதியில் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.இன்று கடையம் வனச்சரகர் சக்திபிரசாத் தலைமையில் வனத்துறையினர் பெத்தான்பிள்ளை குடியிருப்பு கிராமத்தில் முகாமிட்டு கூண்டு வைத்து சிறுத்தைப் புலியை பிடிக்க நடவடிக்கை எடுத்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...