திருமணம் செய்வதாக கூறி பள்ளி மாணவி பலாத்காரம்: இளைஞர் கைது
கேரள மாநிலம் குமுளி ஆனவிலாசம் பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணன்(22), எர்ணாகுளத்தில் தனியார் ஹோட்டலில் வேலைபார்த்து வந்துள்ளார். தனது செல்போனுக்கு வந்த மிஸ்டு கால் மூலம் அடிமாலியைச்


குமுளியில் பள்ளி மாணவியை திருமணம் செய்வதாக கூறி பலாத்காரம் செய்துவிட்டு திருப்பூரில் விட்டுவிட்டு வந்த இளைஞரை குமுளி போலீஸார் இன்று கைது செய்தனர்.
கேரள மாநிலம் குமுளி ஆனவிலாசம் பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணன்(22), எர்ணாகுளத்தில் தனியார் ஹோட்டலில் வேலைபார்த்து வந்துள்ளார். தனது செல்போனுக்கு வந்த மிஸ்டு கால் மூலம் அடிமாலியைச் சேர்ந்த பதினொன்றாம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவி ஒருவருடன் கிருஷ்ணனுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. அந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியதாம். கடந்த ஆகஸ்ட் 21-ந்தேதி பள்ளிக்கு செல்வதாக கூறிய பள்ளி மாணவி குமுளிக்கு கிருஷ்ணன் வீட்டிற்கு வந்துள்ளார். மாணவியை 4 நாட்கள் வீட்டில் தங்க வைத்து திருமணம் செய்து கொள்வதாக கூறி, பாலியல் பலாத்காரம் செய்தாராம். பின்னர், திருப்பூர் சென்று தனியாக வாழலாம் என்று மாணவியை அழைத்துச் சென்ற கிருஷ்ணன் அங்கையை மாணவியை விட்டுவிட்டு ஊருக்கு திரும்பி வந்துவிட்டாராம்.
பள்ளிக்கு சென்ற மாணவியை காணவில்லை என்று மாணவியின் பெற்றோர்கள் கொடுத்த புகாரின் மீது கேரள போலீஸார் விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் மாணவி திருப்பூரில் இருப்பதாக தமிழக காவல் துறை மூலம் பெற்றோர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதாம், மாணவியை மீட்ட குமுளி போலீஸார், மாணவி அளித்த புகாரில் மூணாறு காவல் துணை கண்காணிப்பாளர் சஜி தலைமையில் அடிமாலி இன்ஸ்பெக்டர் குரியன் குமுளியில் வைத்து கிருஷ்ணனை கைது செய்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...