ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

காங்கிரஸ் வெற்றிக் கூட்டணி அமைக்கும்: ஜி.கே.வாசன்

மதுரையில் நடைபெற்ற காங்கிரஸ் கட்சிப் பிரமுகர் இல்லத் திருமணவிழாவில் கலந்து கொள்ள வந்திருந்த மத்திய கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜி.கே.வாசன், செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது,

News image
Updated On :15 டிசம்பர் 2013, 3:26 am

மது

மதுரையில் நடைபெற்ற காங்கிரஸ் கட்சிப் பிரமுகர் இல்லத் திருமணவிழாவில் கலந்து கொள்ள வந்திருந்த மத்திய கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜி.கே.வாசன், செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது,

தமிழக மீனவர்கள் மீதான தாக்குதல் கண்டிக்கத்தக்கது; இலங்கை கடற்படையினரின் தவறான அணுகுமுறையால் இது போன்ற கைதுகள் நடைபெறுகின்றன. மீனவர்கள் கைது பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும் என்றார்.

திமுக, அதிமுக இரு தரப்புடனும் கூட்டணி வேண்டாம் என்று பாஜக கூறி வருகிறதே; காங்கிரஸ் நிலை என்ன என்று கேட்டபோது, கடந்த 2004, 2009 பொதுத் தேர்தல்களில் அகில இந்திய அளவில் காங்கிரஸ் வெற்றிக் கூட்டணி அமைத்தது. அதுபோல் இந்த முறையும் வெற்றிக் கூட்டணி அமைத்து போட்டியிடும் என்றார்.

4 மாநிலத் தேர்தல் முடிவுகள் குறித்துக் கேட்டபோது, 4 மாநிலத் தேர்தல் முடிவுகளை வைத்து 26 மாநிலங்களைக் கணிக்க முடியாது. அது தேசிய அளவிலான பிரச்னைகள். அப்போது அதன் நிலைமையும் மாறுபடும் என்றார்.

மதுரை கட்சிப் பிரமுகர் இல்லத் திருமணத்தை முடித்துக் கொண்டு பட்டுக்கோட்டை அருகே ஒரத்தநாடில் நடைபெறும் மற்றொரு இல்லத் திருமண விழாவில் கலந்து கொள்ளப் புறப்பட்டுச் சென்றார் ஜி.கே.வாசன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.