குஜராத் கலவரம்: மோடிக்கு எதிரான ஷப்ரியின் மனு தள்ளுபடி
கடந்த 2002ம் ஆண்டு கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்திற்கு பிறகு, குஜராத்தில் நிகழ்ந்த வன்முறையின் போது, காங்கிரஸ் முன்னாள் எம்பி எசான் ஜாஃப்ரி உட்பட 69 பேர் எரித்துக்


கடந்த 2002ம் ஆண்டு கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்திற்கு பிறகு, குஜராத்தில் நிகழ்ந்த வன்முறையின் போது, காங்கிரஸ் முன்னாள் எம்பி எசான் ஜாஃப்ரி உட்பட 69 பேர் எரித்துக் கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக குஜராத் முதலமைச்சர் நரேந்திர மோடி உள்ளிட்ட 58 பேர் மீது வழக்கு தொடரப்பட்டது.
இதனை விசாரிக்க சிறப்பு விசாரணைக்கு குழு ஒன்றை உச்ச நீதிமன்றம் அமைத்தது. வழக்கை விசாரித்த சிறப்பு விசாரணைக் குழு, குஜராத் முதலமைச்சர் நரேந்திர மோடி உள்ளிட்ட 58 பேரையும் குற்றமற்றவர்கள் எனக் கூறி விடுவித்தது.
இந்நிலையில் கலவரத்தில் கொல்லப்பட்ட முன்னாள் காங்கிரஸ் எம்.பி எசான் ஜாஃப்ரியின் மனைவி ஜாகியா ஷப்ரி, மோடிக்கு கலவரத்தில் பங்கு உண்டு. எனவே அவரை குற்றவாளியாக அறிவிக்க வேண்டும் என்று கோரி அகதாபாத் நடுவன் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் மோடி குற்றமற்றவர் என கூறி மனுவை தள்ளுபடி செய்து இன்று உத்தரவிட்டுள்ளது.
இது குறித்து கருத்து தெரிவித்த ஷாகியா ஷப்ரி, 'நீதிமன்றத்தின் இந்த முடிவு வருத்தத்தை அளிக்கிறது. இருப்பினும், இதனால் மனம் தளரவில்லை. நீதி கேட்டு, மேல் நீதிமன்றத்தை நாடுவோம்,' என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...