கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

ராஜபட்ச வருகையை கண்டித்து அண்ணாமலைப் பல்கலை. மாணவர்கள் சாலைமறியல்

இலங்கை அதிபர் ராஜபட்ச இந்தியா வருவதைக் கண்டித்து, சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக மாணவர்கள் வியாழக்கிழமை இன்று வகுப்புகளைப் புறக்கணித்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.

News image
Updated On :7 பிப்ரவரி 2013, 11:39 am

ஜி.சுந்தரராஜன்

இலங்கை அதிபர் ராஜபட்ச இந்தியா வருவதைக் கண்டித்து, சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக மாணவர்கள் வியாழக்கிழமை இன்று வகுப்புகளைப் புறக்கணித்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.

அண்ணாமலைப் பல்கலைக்கழக கலை மற்றும் அறிவியல் புல மாணவ, மாணவியர்கள் வியாழக்கிழமை வகுப்புகளை புறக்கணித்து பல்கலைக்கழக வளாகத்தில் பூமா கோயில் முன்பு சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். பின்னர் ஊர்வலமாக வந்து சிதம்பரம் காந்திசிலை அருகே சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். அப்போது ராபட்சவிற்கு எதிராக கோஷமிட்டனர். பின்னர் ஏஎஸ்பி எம்.துரை தலைமையிலான போலீஸார் அவர்களை சமரசப்படுத்தி அனுப்பி வைத்தனர். இதனால் அப்பகுதியில் சுமார் 30 நிமிடங்கள் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.