கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

சிதம்பரத்தில் மூதாட்டியிடம் நூதன முறையில் 2 பவுன் வளையல் திருட்டு!

சிதம்பரம் நகரில் சாலையில் சென்ற மூதாட்டியிடம் நூதன முறையில் மர்மஆசாமி ஒருவர் 2 பவுன் வளையல்களை திருடிச் சென்றார்.

News image
Updated On :14 பிப்ரவரி 2013, 11:23 am

ஜி.சுந்தரராஜன்

சிதம்பரம் நகரில் சாலையில் சென்ற மூதாட்டியிடம் நூதன முறையில் மர்மஆசாமி ஒருவர் 2 பவுன் வளையல்களை திருடிச் சென்றார்.

சிதம்பரம் மேலபுதுத்தெருவைச் சேர்ந்த கிருஷ்ணசாமி ஐயங்கார் மனைவி சகுந்தலா (62). இவர் புதன்கிழமை மாலை அதே தெருவில் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது பின் தொடர்ந்து வந்த மர்மஆசாமி ஒருவர் மூதாட்டியிடம் கையில் பவுன் வளையலை போட்டுச் செல்லாதீர்கள். அதனை கழற்றி வைத்துக் கொள்ளுங்கள் எனக்கூறி, அவரிடமிருந்த வளையலை கழற்றி பேப்பரில் பொட்டலம் மடித்து கொடுத்து பத்திரமாக வைத்துக் கொள்ளுங்கள் என கூறிவிட்டு தலைமறைவானார். மூதாட்டி சகுந்தலா வீட்டிற்கு வந்து பார்த்த போது அப்பொட்டலத்தில் வளையலை காணாமல் கற்கள் இருந்தது தெரிந்து அதிர்ச்சியுற்றார். இதுகுறித்து புகாரின் பேரில் சிதம்பரம் நகர குற்றப்பி்ரிவு போலீஸார் வழக்குப் பதிந்து வளையலை திருடிச் சென்ற மர்மஆசாமி குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.