சிதம்பரம் அருகே இடிமின்னல் தாக்கி இளம்பெண் சாவு: ஒரு பெண் கவலைக்கிடம்
சிதம்பரம் அருகே இடிமின்னல் தாக்கி ஆடு மேய்த்த இளம்பெண் இறந்தார். மற்றொரு பெண் கவலைக்கிடமான நிலையில் பல்கலைக்கழக மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.


சிதம்பரம் அருகே இடிமின்னல் தாக்கி ஆடு மேய்த்த இளம்பெண் இறந்தார். மற்றொரு பெண் கவலைக்கிடமான நிலையில் பல்கலைக்கழக மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.
சிதம்பரம் அருகே உள்ள சேத்தியாத்தோப்பை அடுத்த நந்தீஸ்வரமங்கலம் கிராமத்தில் திங்கள்கிழமை மதியம் வயலில் அதே கிராமத்தைச் சேர்ந்த சக்திவேல் மகள் சத்யா (22), சிகாமணி மனைவி தெய்வக்கணி (48) உள்ளிட்ட 3 பெண்கள் ஆடு மேய்த்துக் கொண்டிருந்தனர். அப்போது பலத்த இடிமின்னலுடன் மழை பெய்ததால், மரத்தின் கீழ் மூவரும் ஒதுங்கியுள்ளனர். அப்போது இடிமின்னல் தாக்கியதில் சத்யா (22) உடல் கருகி சம்பவ இடத்திலேயே இறந்தார். மற்றொரு பெண்மணியான தெய்வக்கணி படுகாயமுற்று சிதம்பரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக கவலைக்கிடமான நிலையில் அண்ணாமலைப் பல்கலைக்கழக மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...