கடலூர் மாவட்டத்தில் சிதம்பரம், காட்டுமன்னார்கோயில் வட்டங்களில் உள்ள 5 ஒன்றியங்களில் சுமார் 1 லட்சத்து 56 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் காவிரி நீர் பாசனம் பெற்று வருகிறது. இந்த ஆண்டு போதிய நீர் இல்லாததால் சுமார் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கர் நிலங்களில் பயிரிடப்பட்டுள்ள சம்பா நெற்பயிர்கள் முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக பூவாலை, வயலாமூர், கொத்தட்டதை, சின்னகுமட்டி, பெரியகுமட்டி, அரியகோஷ்டி, அகரம், கோவிலாம்பூண்டி, கீழமூங்கிலடி, கீழ்அனுவம்பட்டு, மீதிகுடி, கிள்ளை, தா.சோ.பேட்டை, திருநாரையூர் எடையார் உள்ளிட்ட கிராமங்களில் சம்பா நெற்பயிர்கள் வறட்சியால் முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. குமராட்சி ஒன்றியத்தில் 400 ஹெக்டேர்களும், கீரப்பாளையம் ஒன்றியத்தில் 225 ஹெக்டேர்களும், புவனகிரி ஒன்றியத்தில் 800 ஹெக்டேரும், காட்டுமன்னார்கோயில் ஒன்றியத்தில் 180 ஹெக்டேர்களும், பரங்கிப்பேட்டை ஒன்றியத்தில் 4 ஆயிரம் ஹெக்டேரும் என்று வேளாண்துறை அலுவலர்களால் புள்ளி விபரங்கள் எடு்க்கப்பட்டுள்ளது.