மதுவிலக்கை அமுல்படுத்த கோரி காங்கிரஸ் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
சிதம்பரத்தில் கடலூர் தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் மதுவிலக்கை அமுல்படுத்த கோரி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


சிதம்பரத்தில் கடலூர் தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் மதுவிலக்கை அமுல்படுத்த கோரி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சிதம்பரத்தில் கடலூர் தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் மதுவிலக்கை அமுல்படுத்த கோரி உதவி ஆட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் சச்சிதானந்தம் தலைமை தாங்கினார். நகர காங்கிரஸ் தலைவர் வக்கீல் வேல்முருகன், மாவட்ட பொருளாளர் சத்தியமூர்த்தி, முன்னாள் மாவட்ட இளைஞணி துணைத் தலைவர் ராஜாசம்பத், ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக மாநில சேவாதள கூடுதல் அமைப்பாளர் சரவணகுமார், அனைவரையும் வரவேற்றுப் பேசினார்.
ஆர்ப்பாட்டத்திற்கு முன்னான் மாவட்ட தலைவர் ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு கண்டன உரை ஆற்றினார். கூட்டத்தில் மாநில சிறுபான்மை பிரிவு பொதுச் செயலாளர் அப்துல் மாலிக், மாவட்ட பிற்படுத்தப்பட்ட பிரிவு தலைவர் குமார், பாரதியார் வங்கி இயக்குநர் துரை,பாலசந்தர்,மாவட்ட பங்சாயத்து ராஜ் தலைவர் குனக்குன்று,காங்கிரஸ் பேச்சாளர் மோகன்தாஸ், சந்திரசேகரன், இளங்கோ, பாலா, துரைமுருகன், டாக்டர் மஞ்சுளா, சந்தானமேரி, ஜனகம், மீனாசெல்வம், சுப்புலெக்ஷ்மி, கனகஜெயந்தி, ருக்குமணி உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் சிதம்பரம் நாடாளுமன்ற இளைஞர் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கார்த்திக் நன்றி கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...