விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

பாலியல் வழக்கில் கைதான ஆட்டோ ஓட்டுநருக்கு 4 ஆண்டுகள் சிறை

தூத்துக்குடியில் மாணவியை ஆட்டோவில் கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் ஆட்டோ ஓட்டுநருக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து

News image
Updated On :25 பிப்ரவரி 2013, 12:45 pm

இன்பராஜ்

தூத்துக்குடியில் மாணவியை ஆட்டோவில் கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் ஆட்டோ ஓட்டுநருக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தூத்துக்குடி நீதிமன்றத்தில் திங்கள்கிழமை தீர்ப்பளிக்கப்பட்டது.

தூத்துக்குடி அமுதாநகரைச் சேர்ந்த அருணாச்சலம் மகன் சுடலைமணி (38). ஆட்டோ ஓட்டுநர். தூத்துக்குடி மாநகரில் ஆட்டோ ஓட்டி வருகிறார். இந்நிலையில், ஆறுமுகமங்கலத்தைச் சேர்ந்த 15 வயது சிறுமியை கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாக புகார் எழுந்தது.

கடந்த 2011-ம் ஆண்டு ஜூலை மாதம் 26-ம் தேதி தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் உறவினரைப் பார்க்கச் சென்ற அந்த சிறுமியை சுடலைமணி பாலியல் பலாத்காரம் செய்தாராம். இதுகுறித்து வழக்குப் பதிந்த தென்பாகம் போலீஸார் சுடலைமணியை கைது செய்து சிறுமியை மீட்டனர். இந்த வழக்கு தூத்துக்குடி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி ஜெ. பிரபுதாஸ் குற்றம்சாட்டப்பட்ட ஆட்டோ ஓட்டுநர் சுடலைமணிக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். இதையெடுத்து, சுடலைமணி பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.