அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் வத்திராயிருப்பு வட்டார வளமையத்திற்குட்பட்ட தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு கலை மற்றும் கைவினைப் பொருள்கள் தயாரித்தல் பயிற்சி சனிக்கிழமை நடைபெற்றது.இப் பயிற்சியில் பாடப் பொருளுக்கு ஏற்ப படம் வரைதல், பொம்மலாட்ட பொம்மைகள் மற்றும் முகமுடிகள் தயாரித்தல், இலைகளை வைத்து உருவங்கள் அமைத்தல், காகித உருவங்கள், பாடப் பகுதியில் உள்ள பாடல்களை இசையுடன் பாடுதல், தமிழ்த்தாய் வாழ்த்து, தேசிய கீதம் மற்றும் கொடிப்பாடலை எவ்வாறு பாடுவது, படங்களை எவ்வாறு எளிமையாக வரைவது, அச்சு மை கொண்டு உருவங்கள் அமைத்தல் உள்ளிட்ட பயிற்சிகள் நடைபெற்றது.