ஸ்ரீவில்லிபுத்தூர் அரசுப் பள்ளி ஆசிரியை மீது தாக்குதல்: கடற்படை வீரர் கைது
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி இடைநிலை ஆசிரியையை செங்கலால் தாக்கி, கொலை மிரட்டல் விடுத்த கடற்படை வீரரை போலீஸார்


விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி இடைநிலை ஆசிரியையை செங்கலால் தாக்கி, கொலை மிரட்டல் விடுத்த கடற்படை வீரரை போலீஸார் வெள்ளிக்கிழமை மாலை கைது செய்தனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள கொத்தங்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. இவர் நீதிமன்றத்தில் அலுவலக உதவியாளராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி புஷ்பராணி (45). இவர் கொத்தங்குளம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் இடைநிலை ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார். இவர்களது ஒரே மகள் அருகில் உள்ள பாலிடெக்னிக்கில் படித்துக் கொண்டிருந்தார். அப்போது காணாமல் போய், போலீஸார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணைக்குப் பின்னர் மீட்டு வந்தனர்.
இதே ஊரைச் சேர்ந்தவர் சுப்பிரமணியம். இவர் தற்போது திருச்சி அருகே பட்டதாரி ஆசிரியராக வேலை செய்து வருகிறார். இவரது மகன் திருஞானசம்பந்தம் (22). இவருக்கு இந்திய கடற்படையில் இரு ஆண்டுகளுக்கு முன்னர் வேலை கிடைத்துள்ளது. தற்போது கொச்சியில் கடற்படை வீரராக பணிபுரிந்து வருகிறார். காணாமல் போய் திரும்பி வந்த பெண்ணிற்கு இவர் முறை மாப்பிள்ளையாம். இந்தப் பிரச்னையை அடுத்து முன் விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில் ஆசிரியை புஷ்பராணி, வெள்ளிக்கிழமை மாலை வேலை முடிந்து வந்து கொண்டிருந்தபோது, திருஞானசம்பந்தம், ஆசிரியையின் மகள் குறித்து தகாத வார்த்தைகள் பேசியாக கூறப்படுகிறது. இதில் ஏற்பட்ட தகராறில், செங்கலைக் கொண்டு திருஞானசம்பந்தம் ஆசிரியை புஷ்பராணியை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தாராம். காயமுற்ற புஷ்பராணி ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
வன்னியம்பட்டி போலீஸார் வழக்குப் பதிவு செய்து கடற்படை வீரர் திருஞானசம்பந்தத்தை கைது செய்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...