கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

சிதம்பரம் நகரில் பெண் வெட்டிக்கொலை: மகன், மகள் படுகாயம்

சிதம்பரம் நகரில் பஸ்நிலையம் அருகே உள்ள குமரன்தெருவில் பெண் ஒருவர் மூன்று பேர் கொண்ட கும்பலால் சனிக்கிழமை இரவு வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.

News image
Updated On :20 ஜனவரி 2013, 4:25 am

ஜி.சுந்தரராஜன்

சிதம்பரம் நகரில் பஸ்நிலையம் அருகே உள்ள குமரன்தெருவில் பெண் ஒருவர் மூன்று பேர் கொண்ட கும்பலால் சனிக்கிழமை இரவு வெட்டிக் கொலை செய்யப்பட்டார். மேலும் அவரது மகன், மகள் வெட்டு விழுந்து படுகாயத்துடன் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சிதம்பரம் குமரன்தெருவில் வசிக்கும் லேட் செல்வராஜ் மனைவி லலிதா (45) மற்றும் அவரது மகன் செந்தில் (26), மகள் ரேவதி (20) ஆகிய மூவரும் சனிக்கிழமை இரவு மூன்று பேர் கொண்டலால் வெட்டப்பட்டனர். இதில் சம்பவ இடத்திலேயே கழுத்து அறுபட்டு லலிதா இறந்தார். படுகாயமடைந்த செந்தில், ரேவதி ஆகிய இருவரும் அண்ணாமலைநகர் ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தகவல் அறிந்த சிதம்பரம் நகர போலீஸ் இன்ஸ்பெக்டர் பி.முருகானந்தம், அண்ணாமலைநகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆரோக்கியராஜ் மற்றும் போலீஸார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டுள்ளனர். பஸ்நிலையத்தில் உள்ள கடை நடத்துவதில் ஏற்பட்ட பிரச்சனை குறித்து சனிக்கிழமை மாலை லலிதா சிதம்பரம் நகர காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துவிட்டு வீடு திரும்பிய பின்னர் இச்சம்பவம் நடைபெற்றதாகக் கூறப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.