விருதுநகர் மாவட்டம், சாத்தூர், சாமியார் காலனியைச் சேர்ந்தவர் ராமகிருஷ்ணன் மகன் சுந்தரேஸ்வரன் (24). இவர் கிருஷ்ணன்கோவிலில் உள்ள கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் முதுநிலை பொறியியல் (M.E.) இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இதே இடத்தைச் சேர்ந்தவர் இருளப்பன் மகள் விஜயலட்சுமி (17). இவர்கள் இருவருக்கும் பழக்கம் இருந்துள்ளது. சுந்தரேஸ்வரன், விஜயலட்சுமியிடம் ஆசை வார்த்தை கூறி, ஸ்ரீவில்லிபுத்தூர், தெற்குரத வீதியில் உள்ள அன்னை பாரா மெடிக்கல் நிறுவனத்தில் டிப்ளமா இன் நர்ஸிங் சேர்த்துவிட்டுள்ளார். மேலும் விஜயலட்சுமியிடம் உடன் படிக்கும் 5 மாணவிகளுடன் தனியே வீடு எடுத்து ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து படிக்கப்போவதாக கூறி, அவரது தந்தையிடம் அனுமதி பெற்றுள்ளார். ஆனால் ஸ்ரீவில்லிபுத்தூர், வன்னியம்பட்டி வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் தனியே வீடு எடுத்து கடந்த ஒன்னறை ஆண்டுகளாக சுந்தரேஸ்வரனும், விஜயலட்சுமியும் குடும்பம் நடத்திக் கொண்டு படித்து வந்துள்ளனர்.