/

கோவையில் நஷ்டஈடு வழங்காத அரசு பஸ் ஜப்தி

கோவை அருகே நாயக்கன்பாளையத்தைச் சேர்ந்தவர் கிருஷ்ணன். அவரது மகன் மணிகண்டன்(26). இவர் கோவையில் தனியார் ஆஸ்பத்திரியில் அம்புலென்ஸ்

Updated On :29 ஜனவரி 2013, 2:27 pm IST

கோபிசெட்டிபாளையத்தில் நஷ்டஈடு வழங்காத காரணத்தினால் அரசு பஸ் ஜப்தி செய்யப்பட்டது.

கோவை அருகே நாயக்கன்பாளையத்தைச் சேர்ந்தவர் கிருஷ்ணன். அவரது மகன் மணிகண்டன்(26). இவர் கோவையில் தனியார் ஆஸ்பத்திரியில் அம்புலென்ஸ் உதவியாளராக பணியாற்றி வந்தார்.கடந்த 2009 ம் ஆண்டு ஜனவரி மாதம் 4 ம் தேதி மணிகண்டன் அம்புலென்சில் பயணம் செய்துள்ளார். காளிவேலம் பாளையம் பிரிவு என்ற இடத்தில் அம்புலென்ஸ் சென்ற போது எதிரே வந்த அரசு பஸ் அம்புலென்ஸ் மீது மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த மணிகண்டன் உயிரிழந்தார்.

இந்த சம்பவம் குறித்து பல்லடம் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். மணிகண்டனின் தந்தை கிருஷ்ணன் மற்றும் தாயார் பட்டியம்மாள் ஆகியோர் 2009 ம் ஆண்டு மார்ச் மாதம் 30 ம் தேதி கோபி விரைவு நீதிமன்றத்தில் ரூ.8 லட்சம் நஷ்டஈடு கோரி வழக்கு தொடர்ந்தனர்.நீதிபதி கிருஷ்ணன் வழக்கை விசாரித்து 2011 ம் ஆண்டு டிசம்பர் மாதம் 21 ம் தேதி மணிகண்டனின் பெற்றோர்களுக்கு அரசு போக்குவரத்துக் கழகம் ரூ.2 லட்சத்து 89 ஆயிரத்தை நஷ்ட ஈடாக வழங்க வேண்டும் என உத்தரவிட்டார்.அதன் பிறகு நீண்ட நாட்களாக நஷ்ட ஈட்டுத் தொகை வழங்காததால், 2012 ம் ஆண்டு ஜூன் மாதம் 9 ம் தேதி நிறைவேற்று மனு தாக்கல் செய்யப்பட்டது. அதன் பின்னரும் அரசு போக்குவரத்துக் கழகம் நஷ்ட ஈட்டுத் தொகையை வழங்காமல் இருந்துள்ளது.

இறுதியாக கோபி விரைவு நீதிமன்ற நீதிபதி கிருஷ்ணன், அரசு பஸ் ஒன்றை ஜப்தி செய்ய 2012 ம் ஆண்டு டிசம்பர் மாதம் 12 ம் தேதி உத்தரவிட்டார். அதன் அடிப்படையில்  கோபியிலிருந்து பொள்ளாச்சி செல்ல தயாராக இருந்த அரசு பஸ் ஒன்றை நீதிமன்ற ஊழியர்கள்  ஜப்தி செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.