மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

குன்னம் அருகே கூலித்தொழிலாளி மர்மச்சாவு

  பெரம்பலூர் மாவட்டம், குன்னம் அருகே கூலித்தொழிலாளி ஒருவர் மர்மமான முறையில் இறந்து கிடந்தது ஞாயிற்றுக்கிழமை காலை தெரியவந்தது.

News image
Updated On :14 ஜூலை 2013, 5:38 pm

தர்மராஜ்

  பெரம்பலூர் மாவட்டம், குன்னம் அருகே கூலித்தொழிலாளி ஒருவர் மர்மமான முறையில் இறந்து கிடந்தது ஞாயிற்றுக்கிழமை காலை தெரியவந்தது.

  குன்னம் அருகே கிழுமத்தூர் கிராமத்தில் உள்ள மருதையாறு அருகே 35 வயதுள்ள இளைஞர் ஒருவர் இறந்து கிடப்பதாக, அந்த ஊராட்சி தலைவர் ரகுபதி ஞாயிற்றுக்கிழமை காலை குன்னம் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்துள்ளார். அதைத்தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு சென்ற குன்னம் போலீஸார் இறந்து கிடந்தவரின் சடலத்தை மீட்டு விசாரணை மேற்கொண்டபோது, கிழுமத்தூர் கிராமத்தை சேர்ந்த தியாகராஜன் மகன் கூலித்தொழிலாளியான பாஸ்கர் (35) என்பது தெரியவந்தது. இதையடுத்து, பாஸ்கரின் உடலை பெரம்பலூர் அரசு மருத்துவ மனைக்கு போலீஸார் அனுப்பி வைத்தனர்.

  இதுகுறித்து, கிராம நிர்வாக அலுவலர் முருகானந்தம் அளித்த புகாரின்பேரில் குன்னம் காவல் நிலைய ஆய்வாளர் பாலசுப்ரமணியன் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகிறார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.