மனநலன் பாதிக்கப்பட்ட இளைஞர் தற்கொலை
அரியலூர் அருகே, மண்ணெண்ணை ஊற்றி தீயிட்டு சிகிச்சை பெற்று வந்த மனநலன் பாதிக்கப்பட்ட இளைஞர் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தார்.


அரியலூர் அருகே, மண்ணெண்ணை ஊற்றி தீயிட்டு சிகிச்சை பெற்று வந்த மனநலன் பாதிக்கப்பட்ட இளைஞர் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தார்.
அரியலூர் அருகே உள்ள சுப்புராயபுரத்தை சேர்ந்த பூமிநாதன் மகன் மருதமுத்து (25). மன நலன் பாதிக்கப்பட்ட அவர் ஆடு, மாடு மேய்த்து வந்தாராம். இந்நிலையில், கடந்த சில நாள்களாக ஆடு, மாடு மேய்க்க செல்லாததால் அவரது தாய் செல்லம் மருதமுத்துவை திட்டினாராம். இதனால் மனமுடைந்த அவர், கடந்த 11ம் தேதி மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக்கொண்டு பலத்த காயமடைந்தார். அரியலூர் அரசு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சைக்காக தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த மருதமுத்து ஞாயிற்றுக்கிழமை மாலை உயிரிழந்தார்.
இதுகுறித்து புகாரின்பேரில், அரியலூர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...