இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைஈரான் போர்: குடிநீர் பாட்டில் விலை உயர்வு!தேர்தல் நாளில் ஊதியத்துடன் கூடிய விடுமுறை: தனியார் நிறுவனங்களுக்கு உத்தரவுதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!உலகின் மிகப்பெரிய எல்பிஜி ஆலையை தாக்கிய ஈரான்! பெரும் சேதம்! இஸ்ரேல் முதல் கத்தார் வரை...! 9 நாடுகளை தாக்கிய ஈரான்! தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

பர்கூர் அருகே பூட்டிய வீட்டில் நகை மற்றும் பணம் கொள்ளை

பர்கூர் அருகே பூட்டிய வீட்டின் கதவை உடைத்து மர்ம நபர்கள் 7 பவுன் நகை, ரூ.1 லட்சம் பணம் மற்றும் அரிசி மூட்டைகளை திருடிச்சென்றுள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் அருகே தண்ணீர் பள்ளம்

News image
Updated On :16 ஜூலை 2013, 5:48 pm

ராதாகிருஷ்ணன்

பர்கூர் அருகே பூட்டிய வீட்டின் கதவை உடைத்து மர்ம நபர்கள் 7 பவுன் நகை, ரூ.1 லட்சம் பணம் மற்றும் அரிசி மூட்டைகளை திருடிச்சென்றுள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் அருகே தண்ணீர் பள்ளம் கிராமம். இந்த கிராமத்தை சேர்ந்தவர் ஞானசேகரன் (40). இவர் அங்குள்ள பேருந்து நிறுத்தம் அருகே மளிகை கடை நடத்தி வருகிறார். மேலும், சின்னமல்லப்பாடியில் இவருக்கு சொந்தமான தங்கும் விடுதியும் உள்ளது. இவரது மனைவி சுமதி. இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.

இந்த நிலையில், திங்கள்கிழமை காலை ஞானசேகரன் தனது குடும்பத்துடன், வேலூர் மாவட்டம், திருப்பத்தூர் அருகே உள்ள தமலேரிமுத்தூர் கிராமத்தில் உள்ள உறவினரின் மகள் திருமண நிச்சயதார்த்த விழாவில் கலந்து கொள்ள சென்றனர்.

பின்னர், செவ்வாய்க்கிழமை காலை மீண்டும் வீடு திரும்பினர். அப்போது வீட்டின் கதவு திறக்கப்பட்டு கிடந்தது. இதையடுத்து, ஞானசேகரன் உள்ளே சென்று பார்த்தபோது, படுக்கை அறையில் இருந்த பீரோ திறக்கப்பட்டிருந்தது. அதிலிருந்த பொருள்கள் கீழே சிதறிக்கிடந்தது. மேலும், பீரோவில் இருந்த 7 பவுன் தங்க நகை மற்றும் ரூ.1 லட்சம் ரொக்கப்பணத்தை திருடப்பட்டிருப்பது தெரியவந்தது. மேலும், மளிக்கடைக்காக வாங்கி வீட்டில் வைக்கப்பட்டிருந்த தலா 25 கிலோ எடையுள்ள 20 அரிசி மூட்டைகளும் காணாமல் போயிருந்தது தெரியவந்தது.

 இது குறித்து பர்கூர் காவல் நிலையத்தில் ஞானசேகரன் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீஸார் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்தனர். இதையடுத்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.