சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

மணிமுத்தாறு அருவியில் திடீர் வெள்ளம்

இன்றைய காலை நிலவரப்படி பாபநாசம் அணையில் 86 மி.மீ மழையும்,பாபநாசம் கீழ் அணையில் 11 மி.மீ மழையும், சேர்வலாறு அணையில் 67 மி.மீமழையும், மணிமுத்தாறு அணையில் 5.4 மி.மீ மழையும், கடனாநதி

News image
Updated On :14 ஜூன் 2013, 12:40 pm

ஷேக் அப்துல்காதர்

திருநெல்வேலி மாவட்டம், மணிமுத்தாறு அருவியில் திடீரென இன்று வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

மேற்குத் தொடர்ச்சி மலையில் அணைகளின் நீர்பிடிப்பு பகுதியில் மழை பெய்து வருகிறது. இதையடுத்து அணைகளின் நீர்வரத்து அதிகரித்து நீர்மட்டமும் உயர்ந்து வருகிறது.

இன்றைய காலை நிலவரப்படி பாபநாசம் அணையில் 86 மி.மீ மழையும்,பாபநாசம் கீழ் அணையில் 11 மி.மீ மழையும், சேர்வலாறு அணையில் 67 மி.மீமழையும், மணிமுத்தாறு அணையில் 5.4 மி.மீ மழையும், கடனாநதி அணையில் 12 மி.மீ மழையும், ராமநதி அணையில் 4 மி.மீ மழையும் பதிவாகியுள்ளது. மணிமுத்தாறு அருவியில் கடந்த சில தினங்களாக வழக்கத்தை விட தண்ணீர் அதிகம் இருந்தது. இன்று நண்பகலி்ல் திடீரென அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் தண்ணீர் அதிகம் கொட்டும் பகுதியில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதிக்கப்படவில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.