இயக்குநர் தக்காளி சீனிவாசன் காலமானார்!எரிவாயு தட்டுப்பாடு எதிரொலி: எல்பிஜி உற்பத்தியை அதிகரிக்கிறோம் - ரிலையன்ஸ் 2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்திமுக, அதிமுக இல்லாத கூட்டணி? ராமதாஸுடன் சசிகலா சந்திப்பு2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்நாட்டின் கோதுமை உற்பத்தி 2% அதிகரிப்பு! 120 மில்லியன் டன் - மத்திய அரசுசௌதிக்குச் செல்ல மேற்காசியாவில் உள்ள நேபாள மக்களுக்கு அந்நாட்டு அரசு அறிவுறுத்தல்இண்டிகோ விமான நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பீட்டர்ஸ் எல்பர்ஸ் ராஜிநாமாபாகிஸ்தானில் அறிமுகமாகும் 5ஜி: அலைக்கற்றை ஏலம் முடிந்தது!
/

சிதம்பரம் அரசு மருத்துவமனையில் ரூ.35 ஆயிரம் செலவில் சிசி கேமராக்கள் பொருத்தம்!

தமிழகத்தில் ஒரு சில தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளில் குழந்தை கடத்தல் சம்பவம் நடைபெற்றதை அடுத்து சிதம்பரம் காமராஜர் அரசு மருத்துவமனையில் பிரசவஅறை, குழந்தைகள் தீவிர சிகிச்சை பிரிவு, தாய்சேய்

News image
Updated On :15 ஜூன் 2013, 12:51 pm

G.Sundararaj

குழந்தை கடத்தல் உள்ளிட்ட குற்றங்களை தடுக்க சிதம்பரம் காமராஜர் அரசு மருத்துவமனையில் ரூ.35 ஆயிரம் செலவில் 4 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் (சிசி கேமராக்கள்) மற்றும் டிவிக்கள் பொருத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து மருத்துவமனை தலைமை மருத்துவர் சுகுமார் தெரிவித்ததாவது:

தமிழகத்தில் ஒரு சில தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளில் குழந்தை கடத்தல் சம்பவம் நடைபெற்றதை அடுத்து சிதம்பரம் காமராஜர் அரசு மருத்துவமனையில் பிரசவஅறை, குழந்தைகள் தீவிர சிகிச்சை பிரிவு, தாய்சேய் நல பிரிவு, மருத்துவமனை வராண்டா ஆகிய 4 பகுதிகளில் கண்காணிக்க சிசி கேமராக்கள் மற்றும் டிவி பொருத்தப்பட்டுள்ளது. மேலும் புதிய மருத்துவமனை கட்டடத்தில் கீழ் தளத்தில் 5 கேரமாக்களும், மேல் தளத்தில் 4 கேமராக்களும் பொருத்தப்படவுள்ளது. மேலும் மருத்துவமனையில் இதுநாள் வரை சிலிண்டர் மூலம் நோயாளிகளுக்கு ஆக்ஸிஜன் செலுத்தப்பட்டு வந்தது. தற்போது புதிய கட்டடத்தில் பைப் லைன் மூலம் ஆக்ஸிஜன் வழங்க ஒவ்வொரு படுக்கைக்கும் ஆக்ஸிஜன் பைப் லைன் பொருத்தும் பணி நடைபெற்று வருகிறது. விரைவில் பைப் லைன் மூலம் ஆக்ஸிஜன் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும் என்றார் டாக்டர் சுகுமார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.