காணாமல் போன அம்மன் சிலை வெள்ளாற்றங்கரை ஓரம் கண்டெடுப்பு!
சிதம்பரம் அருகே உள்ள சேத்தியாத்தோப்பை அடுத்த கட்டுக்கடை கிராமத்தில் ஸ்ரீமுத்துமாரியம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலில் கடந்த ஜூன் 4-ம் தேதி உற்சவரான ஒன்றரை அடி உயரமுள்ள முத்துமாரியம்மன்


சிதம்பரம் அருகே காணமல் போன மாரியம்மன் சிலை அரியலூர் மாவட்டம் டால்மியாபுரம் அருகே வெள்ளாற்றங்கரையில் கண்டெடுக்கப்பட்டது.
சிதம்பரம் அருகே உள்ள சேத்தியாத்தோப்பை அடுத்த கட்டுக்கடை கிராமத்தில் ஸ்ரீமுத்துமாரியம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலில் கடந்த ஜூன் 4-ம் தேதி உற்சவரான ஒன்றரை அடி உயரமுள்ள முத்துமாரியம்மன் பித்தளை சிலை காணாமல் போனது. இதுகுறித்து சேத்தியாத்தோப்பு போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில் அரியலூர் மாவட்டம் டால்மியாபுரம் அருகே வெள்ளாற்றங்கரையோரம் கிடந்த மாரியம்மன் சிலை அப்பகுதி மக்களால் கண்டெடுக்கப்பட்டு வட்டாட்சியரிடம் ஒப்படைக்கப்பட்டது. தகவல் அறிந்த சேத்தியாத்தோப்பு போலீஸார் அங்கு சென்று சிலையை மீட்டு காவல் நிலையத்திற்கு கொண்டு வந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...