இயக்குநர் தக்காளி சீனிவாசன் காலமானார்!எரிவாயு தட்டுப்பாடு எதிரொலி: எல்பிஜி உற்பத்தியை அதிகரிக்கிறோம் - ரிலையன்ஸ் 2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்திமுக, அதிமுக இல்லாத கூட்டணி? ராமதாஸுடன் சசிகலா சந்திப்பு2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்நாட்டின் கோதுமை உற்பத்தி 2% அதிகரிப்பு! 120 மில்லியன் டன் - மத்திய அரசுசௌதிக்குச் செல்ல மேற்காசியாவில் உள்ள நேபாள மக்களுக்கு அந்நாட்டு அரசு அறிவுறுத்தல்இண்டிகோ விமான நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பீட்டர்ஸ் எல்பர்ஸ் ராஜிநாமாபாகிஸ்தானில் அறிமுகமாகும் 5ஜி: அலைக்கற்றை ஏலம் முடிந்தது!
/

சிதம்பரத்தில் உள்ள 63 தர்மசாலைகளை மீட்பது: இந்து ஆலய பாதுகாப்பு குழு தீர்மானம்

தமிழ்நாடு இந்து ஆலய பாதுகாப்பு குழுக் கூட்டம் மேலபுதுத்தெரு வேதபாராயண மடத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. மாநில நிர்வாகக்குழு அமைப்புச் செயலாளர் சுதாகரன், செயலாளர் ரங்கநாதன் ஆகியோர்

News image
Updated On :17 ஜூன் 2013, 1:52 pm

G.Sundararaj

சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயிலுக்கு வருகை தரும் பக்தர்கள் தங்குவதற்கு நகரில் உள்ள 63 தர்மசாலைகளை (சத்திரங்கள்) மீட்பது என தமிழ்நாடு இந்து ஆலய பாதுகாப்பு குழு தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.

தமிழ்நாடு இந்து ஆலய பாதுகாப்பு குழுக் கூட்டம் மேலபுதுத்தெரு வேதபாராயண மடத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. மாநில நிர்வாகக்குழு அமைப்புச் செயலாளர் சுதாகரன், செயலாளர் ரங்கநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

புதிய நிர்வாகிகள் தேர்வு: தலைவர்-எம்.செங்குட்டுவன், செயலாளர்- எஸ்.மோகன்ரங்கன், பொதுச்செயலாளர் எஸ்.ஜோதிகுருவாயூரப்பன், பொருளாளர்- ஆர்.சபேசன், உறுப்பினர்கள்- முத்துகணேசன்,. சந்திரசேகரன், கணேசசங்கரமூர்த்தி, பாலகிருஷ்ணன், குருமூர்த்தி, ரவி, சரவணன், செல்வி, லஷ்மிகாந்தி, ராஜலட்சுமி, ஜெயா.

கூட்டத்தில் சிதம்பரம் நகரில் உள்ள 10 புண்ணிய தீர்த்த குளங்களை தூர்வாரி சுத்தப்படுத்துவது; விவேகானந்தரின் 150வது ஆண்டு விழாவை சிறப்பாக கொண்டாடுவது; பழமையான சைவ, வைணவ ஆலயங்களை தமிழகஅரசு சீரமைத்து ஒரு கால பூஜையாவது நடத்த வழிவகை செய்யக்கோருவது; தமிழகஅரசு கவனத்தை ஈர்க்கும் பொருட்டு ஆர்ப்பாட்டம் நடத்துவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.