சிதம்பரம் அருகே தீவிபத்தில் 7 வீடுகள் எரிந்து சேதமுற்றன. இதில் ரூ.5 லட்சம் மதிப்புள்ள பொருள்கள் எரிந்து சேதமுற்றன.
சிதம்பரம் அருகே உள்ள கூடுவெளிச்சாவடி கிராமத்தில் இன்று காலை அஞ்சாபுலி என்பவரது வீட்டில் மின்கசிவினால் தீவிபத்து ஏற்பட்டது. அப்போது வீட்டிலிருந்த கேஸ் சிலிண்டர் வெடித்து தீ அருகாமையில் உள்ள வீடுகளில் பரவி சங்கர், நாகராஜன், அமாவாசை, சாமிநாதன், முருதாயி, பரமேஸ்வரன் ஆகியோரது வீடுகளும் எரிந்து சேதமுற்றன. தகவல் அறிந்த சிதம்பரம் மற்றும் சேத்தியாத்தோப்பு பகுதிகளிலிருந்து தீயணைப்புத்துறையினர் விரைந்து சென்று தீ மேலும் பரவாமல் தடுத்து அணைத்தனர்.
இத்தீவிபத்தில் சங்கர் என்பவரது வீட்டில் அவரது மகள் ஷர்மிளாவிற்கு வருகிற ஜூன் 26-ம் தேதி பெருவரப்பூர் மணமகன் வீட்டில் நடைபெற இருந்த திருமணத்திற்காக வைத்திருந்த நகைகள், வெள்ளி பொருள்கள் மற்றும் சீர்வரிசை பொருள்கள் எரிந்து சேதமுற்றதாக தெரிகிறது. தீவிபத்தில் மொத்தம் ரூ.5 லட்சம் மதிப்புள்ள பொருள்கள் நாசமாயின.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

பள்ளி மாணவிகளுக்கு அஞ்சலக சேமிப்புக் கணக்கு தொடக்கம்

ஸ்கேன் மையங்கள் ஆய்வு குறித்து ஆலோசனை

ரூ.17.06 கோடியில் ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டடங்கள் திறப்பு

மீனவா்களுக்கு ரூ.17 கோடியில் நலத்திட்ட உதவிகள்: முதல்வா் ரங்கசாமி வழங்கினாா்
வீடியோக்கள்

இளம் வயதில் அரசியலுக்கு வந்தது ஏன்?: மனம் திறந்த மைதிலி தாக்குர் | Maithili Thakur |
தினமணி வீடியோ செய்தி...

சென்னை வந்தடைந்த அஜித்குமார்!
தினமணி வீடியோ செய்தி...

துரு துரு பாடல்!
தினமணி வீடியோ செய்தி...

நம் வீட்டு கிச்சன் கதவுகளைத் தட்டத் தொடங்கிய ஈரான் போர்! | Explainer | LPG Crisis | Dinamani
தினமணி வீடியோ செய்தி...

