பிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!இயக்குநர் தக்காளி சீனிவாசன் காலமானார்!எரிவாயு தட்டுப்பாடு எதிரொலி: எல்பிஜி உற்பத்தியை அதிகரிக்கிறோம் - ரிலையன்ஸ் 2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்திமுக, அதிமுக இல்லாத கூட்டணி? ராமதாஸுடன் சசிகலா சந்திப்பு2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்நாட்டின் கோதுமை உற்பத்தி 2% அதிகரிப்பு! 120 மில்லியன் டன் - மத்திய அரசுசௌதிக்குச் செல்ல மேற்காசியாவில் உள்ள நேபாள மக்களுக்கு அந்நாட்டு அரசு அறிவுறுத்தல்இண்டிகோ விமான நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பீட்டர்ஸ் எல்பர்ஸ் ராஜிநாமாபாகிஸ்தானில் அறிமுகமாகும் 5ஜி: அலைக்கற்றை ஏலம் முடிந்தது!
/

ரேஷன் கடையை முற்றுகையிட்ட மக்கள்!

சிதம்பரம் பரமேஸ்வரநல்லூர் பகுதியில் வி.எஸ்.ஆர் நகரில் ரேஷன் கடை உள்ளது. இந்த ரேஷன் கடையில் சுமார் 750 குடும்ப அட்டைகளுக்கு பொருள்கள் வழங்கப்படுகிறது. கடந்த ஒருமாத காலமாக ரேஷன் கடை

News image
Updated On :17 ஜூன் 2013, 11:08 am

G.Sundararaj

சரியாக பொருள்கள் வழங்காமல் தரக்குறைவாக பேசி விற்பனையாளரை கண்டித்து இன்று சிதம்பரத்தில் ரேஷன் கடையை பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சிதம்பரம் பரமேஸ்வரநல்லூர் பகுதியில் வி.எஸ்.ஆர் நகரில் ரேஷன் கடை உள்ளது. இந்த ரேஷன் கடையில் சுமார் 750 குடும்ப அட்டைகளுக்கு பொருள்கள் வழங்கப்படுகிறது. கடந்த ஒருமாத காலமாக ரேஷன் கடை சரியாக திறக்கப்படுவதில்லை என்றும், ரேஷன் பொருள்கள் வாங்க வரும் பொதுமக்களிடம் அங்குள்ள விற்பனையாளர் தரக்குறைவாக பேசுவதாகவும் கூறப்படுகிறது. இன்று ரேஷன்கடை திறக்கப்பட்டவுடன் அப்பகுதி மக்கள் சுமார் 100 பேர் பொருள்கள் வாங்க சென்றுள்ளனர். அப்போது விற்பனையாளர் தரக்குறைவாக பேசியதாகக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த மக்கள் கடையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த சிதம்பரம் குடிமைப் பொருள் வழங்குதுறை வட்டாட்சியர் பழனி சம்பவ இடத்திற்கு சென்று பொதுமக்களை சமரசப்படுத்தி விற்பனையாளரை மாற்றம் செய்து, அனைத்து பொருள்களும் வழங்க நடவடிக்கை எடுப்பதாக கூறியதையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.