ஜூலை 5-ல் நடராஜர் கோயில் ஆனித்திருமஞ்சன தரிசன உற்சவம் தொடக்கம்
பூலோக கையாலயம் என்றழைக்கப்படும் சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயில் ஸ்ரீசிவகாமசுந்தரி சமேத ஸ்ரீமந் நடராஜமூர்த்தியின் ஆனித்திருமஞ்சன தரிசன உற்சவம் வருகிற ஜூலை 5-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி


பூலோக கையாலயம் என்றழைக்கப்படும் சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயில் ஸ்ரீசிவகாமசுந்தரி சமேத ஸ்ரீமந் நடராஜமூர்த்தியின் ஆனித்திருமஞ்சன தரிசன உற்சவம் வருகிற ஜூலை 5-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி 10 நாட்கள் நடைபெறுகிறது.
உற்சவ விபரம்: 6-ம் தேதி வெள்ளி சந்திர பிரபை வாகன வீதிஉலா, 7-ம் தேதி தங்க சூரிய பிரபை வாகன வீதிஉலா, 8-ம் தேதி வெள்ளி பூதவாகன வீதிஉலா, 9-ம் தேதி வெள்ளி ரிஷப வாகன (தெருவடைச்சான்) வீதி உலா, 10-ம் தேதி வெள்ளி யானை வாகன வீதிஉலா, 11-ம் தேதி தங்க கைலாச வாகன வீதிஉலா, 12-ம் தேதி தங்க ரதத்தில் பிச்சாண்டவர் வெட்டுங்குதிரையில் வீதிஉலா காட்சி நடைபெறுகிறது.
13-ம் தேதி சனிக்கிழமை தேர்த்திருவிழா, சித்சபையில் உள்ள ஸ்ரீசிவகாமசுந்தரி சமேத ஸ்ரீமந்நடராஜமூர்த்தி அதிகாலை 5 மணி முதல் 5.30 மணிக்குள் திருத்தேரில் எழுந்தருளுதல், தேர் விதிஉலா வந்த பின்னர் இரவு 8 மணிக்கு ஆயிரங்கால் மண்டபத்தில் ஏககால லட்சார்ச்சனை நடைபெறுகிறது. 14-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை அதிகாலை சூரிய உதயத்திற்கு முன் ஆயிரங்கால் மண்டப முகப்பில் மகாபிஷேகமும், திருவாபரண அலங்கார காட்சியும், பிற்பகல் 1 மணிக்கு மேல் பஞ்சமூர்த்தி வீதிஉலா வந்த பின்னர் ஆனித்திருமஞ்சன தரிசனமும் நடைபெறுகிறது. ஜூலை 15-ம் தேதி முத்துப்பல்லக்கு வீதிஉலா காட்சியுடன் உற்சவம் முடிவடைகிறது. உற்சவ ஏற்பாடுகளை உற்சவ ஆச்சாரியார் எஸ்.டி.கோவிந்தராஜ தீட்சிதர், பொதுதீட்சிதர்களின் செயலாளர் எம்.காசிராஜ தீட்சிதர், துணைச்செயலாளர் எஸ்.டி.ருத்ரகணேஷ் தீட்சிதர் ஆகியோர் செய்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...