சிதம்பரம் அருகே கடலில் மூழ்கி மாணவர் சாவு!
சிதம்பரம் அருகே உள்ள பரங்கிப்பேட்டை வண்ணாரப்பாளையத்தைச் சேர்ந்த மனோகர் மகன் மகேஷ் (18). இவர் தனது நண்பர்களான நெல்லுகடைத்தெருவைச் சேர்ந்த விஸ்வகோபால், ரங்கசாமி, அப்பாசாமி படையாச்சி


சிதம்பரம் அருகே கடலில் குளித்த 4 மாணவர்களை அலை அடித்துச் சென்றது. இதில் ஒரு மாணவர் கடலில் மூழ்கி இறந்தார். மீதமுள்ள மூவர் தப்பி கரையேறினர்.
சிதம்பரம் அருகே உள்ள பரங்கிப்பேட்டை வண்ணாரப்பாளையத்தைச் சேர்ந்த மனோகர் மகன் மகேஷ் (18). இவர் தனது நண்பர்களான நெல்லுகடைத்தெருவைச் சேர்ந்த விஸ்வகோபால், ரங்கசாமி, அப்பாசாமி படையாச்சி தெருவைச் சேர்ந்த சண்முகவேல் ஆகிய நால்வருடன் பிளஸ்டூ முடித்துள்ளனர். நால்வரும் அருகே உள்ள சாமியார்பேட்டை கடற்கரைக்கு சென்று கடலில் குளித்துள்ளனர். அப்போது கடலில் பெரிய அலை ஒன்றில் நால்வரும் சிக்கினர். இதில் மகேஷ் அலையில் சிக்கி நீரில் மூழ்கி காணாமல் போனார். மீதமுள்ள விஸ்வகோபால், ரங்கசாமி, சண்முகவேல் ஆகிய மூவரும் தப்பி கரைக்கு வந்து அங்குள்ள மீனவர்களிடம் மகேஷ் நீரில் மூழ்கியதை தெரிவித்தனர். மீனவர்கள் படகில் சென்று வலையை போட்டு தேடிய போது மகேஷ் உடல் சிக்கியதை அடுத்து கரைக்கு கொண்டு வந்தனர். இதுகுறித்து புதுச்சத்திரம் போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...