பிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!இயக்குநர் தக்காளி சீனிவாசன் காலமானார்!எரிவாயு தட்டுப்பாடு எதிரொலி: எல்பிஜி உற்பத்தியை அதிகரிக்கிறோம் - ரிலையன்ஸ் 2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்திமுக, அதிமுக இல்லாத கூட்டணி? ராமதாஸுடன் சசிகலா சந்திப்பு2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்நாட்டின் கோதுமை உற்பத்தி 2% அதிகரிப்பு! 120 மில்லியன் டன் - மத்திய அரசுசௌதிக்குச் செல்ல மேற்காசியாவில் உள்ள நேபாள மக்களுக்கு அந்நாட்டு அரசு அறிவுறுத்தல்இண்டிகோ விமான நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பீட்டர்ஸ் எல்பர்ஸ் ராஜிநாமாபாகிஸ்தானில் அறிமுகமாகும் 5ஜி: அலைக்கற்றை ஏலம் முடிந்தது!
/

அண்ணாமலைப் பல்கலைக்கழக மருத்துவப்படிப்பிற்கான நுழைவுத்தேர்வு முடிவுகள்: இணையதளத்தில் வெளியீடு!

அண்ணாமலைப் பல்கலைக்கழக 2013-14 கல்வி ஆண்டிற்கான எம்பிபிஎஸ்., பிடிஎஸ்., பிபிடி., பிஎஸ்சி நர்சிங் மற்றும் பிஇ., பிஎஸ்சி வேளாண்மை, பிஎஸ்சி தோட்டக்கலை  ஆகிய படிப்புகளுக்கான

News image
Updated On :23 ஜூன் 2013, 9:13 am

G.Sundararaj

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக மருத்துவப் படிப்பிற்கான நுழைவுத்தேர்வு முடிவுகள் மற்றும் தர வரிசைப் பட்டியல் பல்கலைக்கழக இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள பத்திரிகை குறிப்பில்:

அண்ணாமலைப் பல்கலைக்கழக 2013-14 கல்வி ஆண்டிற்கான எம்பிபிஎஸ்., பிடிஎஸ்., பிபிடி., பிஎஸ்சி நர்சிங் மற்றும் பிஇ., பிஎஸ்சி வேளாண்மை, பிஎஸ்சி தோட்டக்கலை  ஆகிய படிப்புகளுக்கான நுழைவுத்தேர்வு ஜூன் 7,8,9 தேதிகளில் தமிழகத்தில் 7 நகரங்களில் நடைபெற்றது. சுமார் 22500 மாணவ, மாணவியர்கள் பங்கேற்று தேர்வெழுதினர். இதில் மருத்துவப் படிப்புகளுக்கான நுழைவுத்தேர்வு தாள்கள் ஒஎம்ஆர் கணினி முறைகள் மூலம் மதிப்பீடு செய்யப்பட்டு தேர்வு முடிவுகள் மற்றும் தர வரிசைப் பட்டியல் அண்ணாமலைப் பல்கலைக்கழக இணையதள முகவரியான www.annamalaiuniversity.ac.in என்ற முகவரியில் வெளியிடப்பட்டுள்ளது. தேர்வெழுதிய மாணவர்கள் தங்களது தேர்வுக்கூட அனுமதிசீட்டு எண்: (Hall ticket No) மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றின் மூலம் இணையதளத்தில் தங்களது மதிப்பெண் மற்றும் தரவரிசை பற்றி அறிந்து கொள்ளலாம். தமிழகஅரசு இடஒதுக்கீட்டு விதி மற்றும் தரவரிசை அடிப்படையில் மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வு வரும் ஜூன் 28,29 மற்றும் 30 ஆகிய தேதிகளில் பல்கலைக்கழக தலைமை நிர்வாக அலுவலகத்தில் நடைபெறும். கலந்தாய்வுக்கான நாள் மற்றும் நேரம் மாணவர்கள் விணப்பிக்க வேண்டிய முறை, சமர்பிக்க வேண்டிய ஆவணங்கள் ஆகியவற்றை அவ்வபோது பல்கலைக்கழக இணையதளத்தில் வெளியிடப்படும். பொறியியல் மற்றும் வேளாண்மை படிப்புகளுக்கான கலந்தாய்வு தேதி மற்றும் இதர விபரங்கள் விரைவில் இணையதளத்தில் வெளியிடப்படும என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.