இயக்குநர் தக்காளி சீனிவாசன் காலமானார்!எரிவாயு தட்டுப்பாடு எதிரொலி: எல்பிஜி உற்பத்தியை அதிகரிக்கிறோம் - ரிலையன்ஸ் 2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்திமுக, அதிமுக இல்லாத கூட்டணி? ராமதாஸுடன் சசிகலா சந்திப்பு2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்நாட்டின் கோதுமை உற்பத்தி 2% அதிகரிப்பு! 120 மில்லியன் டன் - மத்திய அரசுசௌதிக்குச் செல்ல மேற்காசியாவில் உள்ள நேபாள மக்களுக்கு அந்நாட்டு அரசு அறிவுறுத்தல்இண்டிகோ விமான நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பீட்டர்ஸ் எல்பர்ஸ் ராஜிநாமாபாகிஸ்தானில் அறிமுகமாகும் 5ஜி: அலைக்கற்றை ஏலம் முடிந்தது!
/

அண்ணாமலைப் பல்கலையில் விண்ணப்பங்கள் விலை உயர்வு!

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக அரசு ஏற்ற பின்னர் கல்வி கட்டணம் குறையும் என்றும் பல்வேறு அரசின் சலுகைகைளை பெறலாம் என மாணவர்கள் மிகுந்த எதிர்ப்பார்ப்பில் இருந்தனர். ஆனால் தற்போது

News image
Updated On :23 ஜூன் 2013, 12:04 pm

G.Sundararaj

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் அனைத்து படிப்புகளில் சேருவதற்கான விண்ணப்பங்களின் விலை உயர்த்தப்பட்டதால் ஏழை, எளிய மாணவர்கள் பாதிப்பிற்குள்ளாகியுள்ளனர்.

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக அரசு ஏற்ற பின்னர் கல்வி கட்டணம் குறையும் என்றும் பல்வேறு அரசின் சலுகைகைளை பெறலாம் என மாணவர்கள் மிகுந்த எதிர்ப்பார்ப்பில் இருந்தனர். ஆனால் தற்போது ஏற்கனவே இருந்த விண்ணப்பங்களின் விலையில் ரூ.100 முதல் 200 வரை தற்போது உயர்த்தப்பட்டதால் ஏழை, எளிய மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

எம்இ, எம்டெக், எம்.பார்ம், எம்சிஏ, எம்எஸ்சி விவசாயம், எம்பிஏ, பிஎட், எம்எட், எம்எஸ்சி நர்சிங், எம்பிடி ஆகிய படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் விலை ரூ.ஆயிரம். எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு ரூ.500; பிஇ பகுதிநேரம், பி.பார்ம் லேட்டரல் என்ட்ரி, டி.பார்ம், இன்டகிரேடட், பிபிஇடி, எம்பிஇடி ஆகிய படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் விலை ரூ.600, எஸ்சி., எஸ்டி பிரிவினருக்கு ரூ.300; பி.மியுசிக், பி.டான்ஸ், இசைக்கலைமணி, எம்.மியுசிக், எம்.டான்ஸ், எம்எல்ஐஎஸ், பிஎல்ஐஎஸ், பிபிஇ மற்றும் சான்றிதழ் வகுப்புகளுக்கான விண்ணப்ப விலை ரூ.400, எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு ரூ.200 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

பிஇ, பிஎஸ்சி விவசாயம், எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு சுயநிதி பல்கலைக்கழக கல்வி கட்டணம் நிர்ணயம்: மருத்துவக்கல்லூரி கட்டணங்கள் விபரம்- எம்பிபிஎஸ் (150 எண்ணிக்கை), ஒராண்டு கட்டணம் ரூ.5,54,370; பிடிஎஸ் (100 எண்ணிக்கை) கட்டணம் ரூ.3,50,370; பி.ஃபார்ம் (100 எண்ணி்க்கை) கட்டணம் ரூ. 35,170, பிபிடி (30 எண்ணிக்கை) ரூ.32,270; பிஎஸ்சி நர்சிங் (100 எண்ணிக்கை) கட்டணம் ரூ 55,370. பிஇ மொத்த எண்ணிக்கை 2870. பிரிவு வாரியாக ஓராண்டு கட்டணம் விபரம்: சிவில் இன்ஜினியரிங் ரூ.75 ஆயிரம், சிவில் மற்றும் ஸ்ட்ரெக்சரல் இன்ஜினியரிங், எலக்டிரானிக் மற்றும் இன்ஸ்ட்ருமெண்டேஷன் இன்ஜினியரிங், கெமிக்கல் இன்ஜினியரிங், இன்பர்மேஷன் டெக்னாலஜி ஆகிய படிப்புகளுக்கு ரூ.65 ஆயிரம், மெக்கானிக்கல் இன்ஜினியரிங் ரூ.80 ஆயிரம், மெக்கானிக்கல் இன்ஜினியரிங் (Manufacturing) 65 ஆயிரம், எலக்டிரிகல் மற்றும் எலக்டிரானிக்ஸ் இன்ஜினியரிங், எலக்டிரானிக்ஸ் மற்றும் கம்யுனிகேஷன் இன்ஜினியரிங், கம்ப்யூட்டர் சயன்ஸ் இன்ஜினியரிங் ஆகிய படிப்புகளுக்கு ரூ70 ஆயிரம்,

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.