இயக்குநர் தக்காளி சீனிவாசன் காலமானார்!எரிவாயு தட்டுப்பாடு எதிரொலி: எல்பிஜி உற்பத்தியை அதிகரிக்கிறோம் - ரிலையன்ஸ் 2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்திமுக, அதிமுக இல்லாத கூட்டணி? ராமதாஸுடன் சசிகலா சந்திப்பு2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்நாட்டின் கோதுமை உற்பத்தி 2% அதிகரிப்பு! 120 மில்லியன் டன் - மத்திய அரசுசௌதிக்குச் செல்ல மேற்காசியாவில் உள்ள நேபாள மக்களுக்கு அந்நாட்டு அரசு அறிவுறுத்தல்இண்டிகோ விமான நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பீட்டர்ஸ் எல்பர்ஸ் ராஜிநாமாபாகிஸ்தானில் அறிமுகமாகும் 5ஜி: அலைக்கற்றை ஏலம் முடிந்தது!
/

அண்ணாமலைப் பல்கலை. எம்பிபிஎஸ், பிஇ படிப்புகளுக்கான மாற்றுத் திறனாளிகளுக்கான கலந்தாய்வு கால அட்டவணை

அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் எம்பிபிஎஸ், பிடிஎஸ், பிபிடி, பி.பார்ம், பிஎஸ்சி நர்சிங், பிஇ, பிஎஸ்சி விவசாயம், பிஎஸ்சி தோட்டக்கலை ஆகிய படிப்புகளுக்கான நுழைவுத்தேர்வை ஜூன் 7,8,9 தேதிகளில்

News image
Updated On :24 ஜூன் 2013, 3:04 pm

G.Sundararaj

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக மாற்றுத் திறனாளி மாணவர்களின் சேர்க்கைக்கான கலந்தாய்வு கால அட்டவணை பல்கலைக்கழக நிர்வாகத்தால் வெளியிடப்பட்டுள்ளது.

அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் எம்பிபிஎஸ், பிடிஎஸ், பிபிடி, பி.பார்ம், பிஎஸ்சி நர்சிங், பிஇ, பிஎஸ்சி விவசாயம், பிஎஸ்சி தோட்டக்கலை ஆகிய படிப்புகளுக்கான நுழைவுத்தேர்வை ஜூன் 7,8,9 தேதிகளில் நடத்தியது. அதில் மாணவர்கள் பெற்ற மதிப்பெண்கள் மற்றும் தரவரிசை 22.6.2013 அன்று பல்கலைக்கழக இணையதள முகவரி www.annamalaiuniversity.ac.in ல் வெளியிடப்பட்டுள்ளது.

நுழைவுத்தேர்வில் பங்கேற்ற மாற்றுத்திறனாளி மாணவர்கள் கீழ்கண்ட தேதிகளில் கலந்தாய்விற்கு அழைக்கப்படுகிறார்கள்.

எம்பிபிஎஸ், பிடிஎஸ், பிபிடி, பி.பார்ம், பிஎஸ்சி நர்சிங்- ஜூன் 28-ம் தேதி, காலை 9 மணி;

பிஇ- ஜூலை 3-ம் தேதி, காலை 9 மணி;

பிஎஸ்சி வேளாண்மை, பிஎஸ்சி தோட்டக்கலை- ஜூலை 8-ம் தேதி காலை 9 மணி.

மாற்றுத் திறனாளி மாணவர்களின் சேர்க்கை தகுதிகள் மற்றும் இடஒதுக்கீடு விபரங்கள் பல்கலைக்கழக இணையதள முகவரியில் வெளியிடப்பட்டுள்ளது. கலந்தாய்வு அண்ணாமலைநகர் அண்ணாமலைப் பல்கலைக்கழக தலைமை நிர்வாக அலுவலகத்தில் நடைபெறுகிறது என பல்கலைக்கழக நிர்வாகம் வெளியிட்டுள்ள பத்திரிகை குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.