சிதம்பரம் அருகே அரசு பஸ்கள் நேருக்கு நேர் மோதல்: 15 பேர் காயம்
சிதம்பரம் அருகே வயலூர் எனுமிடத்தில் இன்று காலை தனியார் பஸ்ஸை முந்த முயன்ற போது இரு அரசு பஸ்கள் நேருக்கு நேர் மோதிக் கொண்டன. இவ்விபத்தில் இரு பஸ் டிரைவர்கள் உள்ளிட்ட 15 பேர்


சிதம்பரம் அருகே வயலூர் எனுமிடத்தில் இன்று காலை தனியார் பஸ்ஸை முந்த முயன்ற போது இரு அரசு பஸ்கள் நேருக்கு நேர் மோதிக் கொண்டன. இவ்விபத்தில் இரு பஸ் டிரைவர்கள் உள்ளிட்ட 15 பேர் காயமடைந்தனர்.
சிதம்பரத்திலிருந்து இன்று காலை குறிஞ்சிப்பாடி நோக்கி அரசு டவுன் பஸ் ஒன்று சென்றது. அப்போது சிதம்பரம் அருகே உள்ள வயலூர் எனுமிடத்தில் தனியார் பஸ்ஸை முந்த முயன்ற போது எதிரே வந்த சோழத்தரம்-சிதம்பரம் நோக்கி வந்த அரசு டவுன் பஸ்ஸூம் நேருக்கு நேர் மோதிக் கொண்டு அருகாமையில் உள்ள பள்ளத்தில் இறங்கியது. இவ்விபத்தில் பஸ் டிரைவர்கள் வெங்கடேசன் (44), சவுந்தரராஜன் (42) மற்றும் பயணிகள் அருளரசி (21), புணர்பூசம் (60), குப்பம்மாள் (60), மீனாட்சி (43) உள்ளிட்ட 15 பேர் காயமுற்று 108 ஆம்புலன்ஸ் மூலம் சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டு சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். இதுகுறித்து சிதம்பரம் தாலுக்கா போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...