இயக்குநர் தக்காளி சீனிவாசன் காலமானார்!எரிவாயு தட்டுப்பாடு எதிரொலி: எல்பிஜி உற்பத்தியை அதிகரிக்கிறோம் - ரிலையன்ஸ் 2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்திமுக, அதிமுக இல்லாத கூட்டணி? ராமதாஸுடன் சசிகலா சந்திப்பு2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்நாட்டின் கோதுமை உற்பத்தி 2% அதிகரிப்பு! 120 மில்லியன் டன் - மத்திய அரசுசௌதிக்குச் செல்ல மேற்காசியாவில் உள்ள நேபாள மக்களுக்கு அந்நாட்டு அரசு அறிவுறுத்தல்இண்டிகோ விமான நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பீட்டர்ஸ் எல்பர்ஸ் ராஜிநாமாபாகிஸ்தானில் அறிமுகமாகும் 5ஜி: அலைக்கற்றை ஏலம் முடிந்தது!
/

அண்ணாமலைப் பல்கலையில் மருத்துவப் படிப்பிற்கான கவுன்சிலிங்: முதல் 3 இடங்களை பிடித்த மாணவிகள்

அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தை அரசு ஏற்றவுடன் இந்த ஆண்டு முதன் முறையாக அனுமதி சேர்க்கைக்கு தமிழகஅரசு இடஒதுக்கீட்டு விதி மற்றும் தரவரிசை அடிப்படையில் கலந்தாய்வு நடத்தப்படுகிறது. மருத்துவப்

News image
Updated On :28 ஜூன் 2013, 11:01 am

G.Sundararaj

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் முதன் முதலாக இந்த கல்வி ஆண்டில் இன்று நடைபெற்ற மருத்துவ படிப்பிற்கான கவுன்சிலிங்கில் தகுதி அடிப்படையில் முதல் 3 ரேங்குகளை கைப்பற்றிய மாணவியர்களுக்கு அனுமதி சேர்க்கை வழங்கப்பட்டது.

அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தை அரசு ஏற்றவுடன் இந்த ஆண்டு முதன் முறையாக அனுமதி சேர்க்கைக்கு தமிழகஅரசு இடஒதுக்கீட்டு விதி மற்றும் தரவரிசை அடிப்படையில் கலந்தாய்வு நடத்தப்படுகிறது. மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வு பல்கலைக்கழக சாஸ்திரி ஹாலில் ஜூன் 28-ம் தேதி வெள்ளிக்கிழமை காலை 9 மணிக்கு  தொடங்கியது.  மேலும் மருத்துவப் படிப்பிற்கான கவுன்சிலிங் 29 மற்றும் 30 ஆகிய தேதிகளில் தொடர்ந்து நடைபெறுகிறது.  பிஇ படிப்புகளுக்கான கலந்தாய்வு ஜூலை 3-ம் தேதி தொடங்கி 7-ம் தேதி வரையும், வேளாண் படிப்புகளுக்கான கலந்தாய்வு ஜூலை 8-ம் தேதி தொடங்கி 12-ம் தேதி வரையும் நடைபெறுகிறது.

இன்று தொடங்கிய மருத்துவப் படிப்பிற்கான கவுன்சிலிங்கில் கோவையைச் சேர்ந்த மாணவி ஆர்.ரம்யாலட்சுமி (1169), விழுப்புரத்தைச் சேர்ந்த எம்.சூரியகலா (1139),  சேலத்தைச் சேர்ந்த எஸ்.எம்.சுருதி ஆகிய மூவரும் முதல் மூன்று ரேங்குகளை பெற்றனர். இவர்களுக்கு எம்பிபிஎஸ் படிப்பிற்கான அனுமதி சேர்க்கையை பல்கலைக்கழக நிர்வாகி ஷிவ்தாஸ்மீனா ஐஏஎஸ் வெள்ளிக்கிழமை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் பதிவாளர் (பொறுப்பு0 என்.பஞ்சநதம், மாவட்ட வருவாய் அதிகாரிகள் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், டி.கிருஸ்துராஜ், தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி ஏ.ரகுபதி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.