நிதிநிறுவனத்தில் ரூ.8.27 லட்சம் மோசடி: இருவர் மீது வழக்குப்பதிவு
சிதம்பரம் வடக்குசன்னதியில் கொசமற்றம் நிதிநிறுவனம் இயங்கி வருகிறது. இந்நிறுவனத்தின் வரவு-செலவு கணக்குகளை நிறுவன தணிக்கையாளர்கள் தற்போது தணிக்கை செய்தனர். அப்போது சிதம்பரம் மார்க்கெட்


சிதம்பரத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் ரூ.8.27 லட்சம் தொகை மோசடி செய்ததாக இருவர் மீது நகர போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
சிதம்பரம் வடக்குசன்னதியில் கொசமற்றம் நிதிநிறுவனம் இயங்கி வருகிறது. இந்நிறுவனத்தின் வரவு-செலவு கணக்குகளை நிறுவன தணிக்கையாளர்கள் தற்போது தணிக்கை செய்தனர். அப்போது சிதம்பரம் மார்க்கெட் தெருவைச் சேர்ந்த பிரபு என்பவரது பெயரில் கவரிங் நகைகளை கொடுத்து ரூ.8.27 லட்சம் ரொக்கத்தை மோசடி செய்தது தெரியவந்தது. இந்நிறுவனத்தில் பணியாற்றி தலைமறைவான ஊழியர்கள் நீலகிரி மாவட்டம் நிலக்கோட்டையைச் சேர்ந்த திபுதினேஷ். கேரளா மாநிலம் கோட்டையத்தை சேர்ந்த டோனி ஆகிய இருவரும் 2012-ம் ஆண்டு கவரிங் நகைகளை வைத்து ரூ.8.27 லட்சம் பணத்தை மோசடி செய்தது தெரிவந்தது. இதுகுறித்து நிதிநிறுவன ஏரியா மேலாளர் பினிக்ஸ் ஜோசப் சிதம்பரம் நகர காவல் நிலையத்தில் வியாழக்கிழமை புகார் அளித்தார். புகாரின் பேரில் நகர போலீஸார் மேற்கண்ட இருவர் மீது வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...