இயக்குநர் தக்காளி சீனிவாசன் காலமானார்!எரிவாயு தட்டுப்பாடு எதிரொலி: எல்பிஜி உற்பத்தியை அதிகரிக்கிறோம் - ரிலையன்ஸ் 2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்திமுக, அதிமுக இல்லாத கூட்டணி? ராமதாஸுடன் சசிகலா சந்திப்பு2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்நாட்டின் கோதுமை உற்பத்தி 2% அதிகரிப்பு! 120 மில்லியன் டன் - மத்திய அரசுசௌதிக்குச் செல்ல மேற்காசியாவில் உள்ள நேபாள மக்களுக்கு அந்நாட்டு அரசு அறிவுறுத்தல்இண்டிகோ விமான நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பீட்டர்ஸ் எல்பர்ஸ் ராஜிநாமாபாகிஸ்தானில் அறிமுகமாகும் 5ஜி: அலைக்கற்றை ஏலம் முடிந்தது!
/

பூங்காவிற்கு பெயர் வைப்பதில் போட்டி: திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு

காட்டுமன்னார்கோயில் சந்தைதோப்பு அருகே பூங்கா ஒன்று உள்ளது. அந்த பூங்காவிற்கு 2007-ல் முன்னாள் திமுக மாவட்டச் செயலாளர் எம்.ஆர்.கிருஷ்ணமூர்த்தி பெயர் வைப்பது என பேரூராட்சி கூட்டத்தில் தீர்மானம்

News image
Updated On :28 ஜூன் 2013, 12:44 pm

G.Sundararaj

காட்டுமன்னார்கோயிலில் பூங்கா ஒன்றிற்கு பெயர் வைப்பதில்  திமுக, அதிமுக இடையே போட்டியில் இன்று நடைபெற்ற பேரூராட்சி மன்ற கூட்டத்தில் திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

காட்டுமன்னார்கோயில் சந்தைதோப்பு அருகே பூங்கா ஒன்று உள்ளது. அந்த பூங்காவிற்கு 2007-ல் முன்னாள் திமுக மாவட்டச் செயலாளர் எம்.ஆர்.கிருஷ்ணமூர்த்தி பெயர் வைப்பது என பேரூராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்நிலையில் இன்று பேரூராட்சி தலைவர் எம்.ஜி.ஆர் தாசன் (அதிமுக) தலைமையில் நடைபெற்ற பேரூராட்சி கூட்டத்தில் 1-வது வார்டைச் சேர்ந்த அதிமுக உறுப்பினர் ரவி பூங்காவிற்கு எம்ஜிஆர் பெயர் வைப்பது என தீர்மானம் நிறைவேற்றி அரசின் பரிந்துரைக்கு அனுப்பப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக உறுப்பினர்கள் சுப்பிரமணியன், தாமோதரகண்ணன், மணிமாறன், மீனாராஜசேகர், கிருஷ்ணன் ஆகிய 5 பேர் வெளிநடப்பு செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.