வேன் கவிழ்ந்து பொறியியல் கல்லூரி மாணவர்கள் காயம்
அழகர்கோவில் அருகே வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் தனியார் பொறியியல் கல்லூரி மாணவர்கள் 15 பேர் காயமடைந்தனர்.


அழகர்கோவில் அருகே வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் தனியார் பொறியியல் கல்லூரி மாணவர்கள் 15 பேர் காயமடைந்தனர்.
அழகர்கோவில் மேலூர் சாலையில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது.
இதையடுத்து சாலையில் நின்றிருந்த அக்கல்லூரிகளின் மாணவர்கள், அவ்வழியாக வந்த மினி வேனில் மேலூருக்குச் சென்றனராம்.
அப்போது எதிர்பாராத விதமாக வேன் சக்கரம் கழன்றதில் வாகனம் கவிழ்ந்ததாகக் கூறப்படுகிறது. இதில் பயணம் செய்த 15 பேர் காயமடைந்தனர்.
மேலூர் அரசு மருத்துவமனையில் அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. விபத்து குறித்து மேலவளவு போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...