2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்நாட்டின் கோதுமை உற்பத்தி 2% அதிகரிப்பு! 120 மில்லியன் டன் - மத்திய அரசுசௌதிக்குச் செல்ல மேற்காசியாவில் உள்ள நேபாள மக்களுக்கு அந்நாட்டு அரசு அறிவுறுத்தல்இண்டிகோ விமான நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பீட்டர்ஸ் எல்பர்ஸ் ராஜிநாமாபாகிஸ்தானில் அறிமுகமாகும் 5ஜி: அலைக்கற்றை ஏலம் முடிந்தது!மதுரை விமான நிலையத்திற்கு சர்வதேச அந்தஸ்து! - மத்திய அமைச்சரவை ஒப்புதல்மருத்துவக் கல்லூரிகளில் விளையாட்டுப் பிரிவு ஒதுக்கீடு அதிகரிப்பு: தமிழக அரசுஎல்பிஜி சிலிண்டர் தட்டுப்பாடு: பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம்!
/

சிதம்பரம் ரயில்வே மேம்பாலம் கீழ்பகுதியில் இளைஞர் கொலை: நண்பர்கள் மூவர் கைது

சிதம்பரம் ரயில்வே மேம்பாலத்தின் கீழ் பகுதியில் 25 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத இளைஞர் ஒருவர் கழுத்து அறுபட்ட நிலையில் கொலை செய்யப்பட்டு இறந்து கிடந்தார்.

News image
Updated On :20 மார்ச் 2013, 10:43 am

G.Sundararaj

சிதம்பரம்-அண்ணாமலைநகர் ரயில்வே மேம்பாலம் கீழ்பகுதியில் இளைஞர் ஒருவர்  நேற்று  நள்ளிரவு கழுத்து அறுபட்டு கொலை செய்யப்பட்டு இறந்து கிடந்தார்.

சிதம்பரம் ரயில்வே மேம்பாலத்தின் கீழ் பகுதியில் 25 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத இளைஞர் ஒருவர் கழுத்து அறுபட்ட நிலையில் கொலை செய்யப்பட்டு இறந்து கிடந்தார். ரோந்து சென்றை நகர போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகானந்தம் மற்றும் போலீஸார் இளைஞர் கொலை செய்யப்பட்டு இறந்து கிடந்ததை பார்த்துள்ளனர். இறந்தவர் யார் என்று தெரியாததால் கிராம நிர்வாக அலுவலர் திருமூர்த்தி கொடுத்த புகாரின் பேரில் நகர போலீஸார் வழக்குப் பதிந்து உடலை பிரதே பரிசோதனைக்கு சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

பின்னர் விசாரணையில் கொலை செய்யப்பட்ட இளைஞர் சிதம்பரத்தை அடுத்த கோவிலாம்பூண்டி கிராமத்தைச் சேர்ந்த எலக்டிரீசியன் பி.மணிகண்டன் (23) என தெரியவந்தது. சி.முட்லூரைச் சேர்ந்த சுரேஷ் (32), அம்முகுட்டிப்பாளையத்தைச் சேர்ந்த சிதம்பரநாதன் (27), மணலூரைச் சேர்ந்த ரமேஷ் (27) ஆகிய மூன்று நண்பர்கள் சேர்ந்து மணிகண்டனை அழைத்து வந்து மது கொடுத்து கொலை செய்ததாக போலீஸார் விசாரணையில் தெரியவந்து மூவரையும் நகர போலீஸார் கைது செய்தனர்.      

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.