/

பெண் தற்கொலை வழக்கில் கணவருக்கு 7 ஆண்டுகள் சிறை

தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அருகேயுள்ள வடக்குமாநாடு பகுதியைச் சேர்ந்தவர் கந்தையா (31). இவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த சுப்புலட்சுமிக்கும் கடந்த 20-1-2002 அன்று திருமணம் நடைபெற்றது. திருமணத்தில் போது பெண் வீட்டார் 30 பவுன் நகையை வரதட்சிணையாக வழங்கியதாகக் கூறப்படுகிறது.

News image
Updated On :22 மார்ச் 2013, 12:42 pm

இன்பராஜ்

பெண் தற்கொலை வழக்கில் கணவருக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து தூத்துக்குடி  முதலாவது அமர்வு நீதிமன்றத்தில் தீர்ப்பளிக்கப்பட்டது.

தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அருகேயுள்ள வடக்குமாநாடு பகுதியைச் சேர்ந்தவர் கந்தையா (31). இவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த சுப்புலட்சுமிக்கும் கடந்த 20-1-2002 அன்று திருமணம் நடைபெற்றது. திருமணத்தில் போது பெண் வீட்டார் 30 பவுன் நகையை வரதட்சிணையாக வழங்கியதாகக் கூறப்படுகிறது.இந்நிலையில், கூடுதல் வரதட்சிணை கேட்டு கந்தையா அவரது தாய் பேச்சியம்மாள், சகோதரிகள் கௌரி (29), முத்துலட்சுமி (28), சரஸ்வதி (27) ஆகியோர் சுப்புலட்சுமியை சித்ரவதை செய்ததாகக் கூறப்படுகிறது. இதனால், மனமுடைந்த சுப்புலட்சுமி வீட்டில் இருந்தபோது 19-03-2008 அன்று தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாராம்.

இதையெடுத்து, வரதட்சிணை கேட்டு துன்புறுத்தியதாக வழக்குப் பதிந்த திருச்செந்தூர் போலீஸார் குற்றம்சாட்டப்பட்ட சுப்புலட்சுமியின் கணவர் கந்தையா, அவரது தாய் பேச்சியம்மாள் மற்றும் கந்தையாவின் சகோதரிகள் கௌரி, முத்துலட்சுமி, சரஸ்வதி ஆகிய 5 பேரையும் கைது செய்தனர்.இந்த வழக்கு தூத்துக்குடி முதலாவது அமர்வு கூடுதல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி மேரி அன்சலம் குற்றம்சாட்டப்பட்டவர்களில் கந்தையாவுக்கு மட்டும் 7 ஆண்டுள் சிறைத் தண்டனையும், ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பள்ளி்தார். மற்ற நால்வரும் விடுவிக்கப்பட்டனர்.       

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.