/

தூத்துக்குடியில் விஷவாயு கசிவா? : மக்களுக்கு மூச்சுத்திணறல்; அவதி

தூத்துக்குடியில் இன்று காலை 7 மணி அளவில் அங்கிருந்த பொதுமக்களுக்கு மூச்சுத்திணறல், சுவாசக் கோளாறு, கண் எரிச்சல்,

News image
Updated On :23 மார்ச் 2013, 4:33 am

இன்பராஜ்

தூத்துக்குடியில் இன்று காலை 7 மணி அளவில் அங்கிருந்த பொதுமக்களுக்கு மூச்சுத்திணறல், சுவாசக் கோளாறு, கண் எரிச்சல், ஒவ்வாமை ஆகியன ஏற்பட்டன. ஸ்டெர்லைட் ஆலையைச் சுற்றியுள்ள பகுதிகளில் மக்களுக்கு ஏற்பட்ட இந்தத் திடீர் தொந்தரவால், பொதுமக்களிடம் பீதி ஏற்பட்டது. ஆலையில் இருந்து விஷவாயு கசிந்துள்ளதாக ஏற்பட்ட தகவலை அடுத்து பொதுமக்கள் பெரிதும் பரபரப்படைந்தனர். இருப்பினும், எவரும் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக செல்லவில்லை. ஆனால், அருகில் உள்ள மருத்துவமனையில் இருந்த நோயாளிகளும் மூச்சுத்திணறலால் அவதிப்பட்டனர்.

இதுகுறித்து ஸ்டெர்லைட் ஆலையிடம் தொடர்பு கொண்டு கேட்டபோது, தங்கள் ஆலையில் இருந்து அப்படி எதுவும் வாயுக் கசிவு இல்லை என்று உறுதிபடத் தெரிவித்தனர்.

ஆனால், அருகில் உள்ள தனியார் ஆலைகளில் இருந்துதான் விஷ வாயுக் கசிவு இருந்திருக்கக் கூடும் என்று பொதுமக்கள் புகார் தெரிவித்தனர்.

மூச்சுத்திணறல் உள்ளிட்ட இந்தத் தொல்லைகள் அடுத்த ஒரு மணி நேரத்தில் சரியானதால் மக்கள் நிம்மதி அடைந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.