ஸ்டெர்லைட் ஆலை விவகாரம்:வைகோ கூறிய வார்த்தைகள் சரியானது அல்ல: ஆட்சியர்
தூத்துக்குடி சிப்காட் பகுதியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து வெளியான கந்தக டை ஆக்சைடு வாயு காரணமாக பொதுமக்களுக்கு பாதிப்பு


தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து நச்சுவாயு வெளியான விவாகாரம் குறித்து அதிகாரிகள் குழு அளிக்கும் அறிக்கைக்குப் பிறகே அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் மாவட்ட ஆட்சியர் ஆஷிஷ்குமார்.இதுகுறித்து அவர் அளித்த பேட்டியில் :
தூத்துக்குடி சிப்காட் பகுதியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து வெளியான கந்தக டை ஆக்சைடு வாயு காரணமாக பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக, குற்றவியல் நடைமுறைச் சட்டம் 133-ன் படி நடவடிக்கை மேற்கொண்டு அந்த ஆலையில் உள்ள கந்தக டை ஆக்சைடு ஆலையை ஏன் மூடக்கூடாது? ன விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளோம். இதுவே கடுமையான நடவடிக்கைதான்.மார்ச் 28-ம் தேதிக்குள் ஆலை நிர்வாகத்தினர் விளக்கம் அளிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. அவர்கள் எவ்வாறு விளக்கம் அளிக்கிறார்கள் என்பதை பொறுத்து இருந்து பார்ப்போம்.
ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து ஒரு கன மீட்டருக்கு 80 மெக்ரோ கிராம் கந்தக டை ஆக்சைடு வெளியேற்றிக் கொள்ளலாம் என அனுமதி உள்ளது. சம்பவம் நிகழ்ந்த அன்று 65 மெக்ரோ கிராம் கந்தக கடை ஆக்டைடு வெளியிறி இருப்பதாக மாசுக்கட்டுப்பாட்டு துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இருந்தபோதிலும், மக்களுக்கு லேசான பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் தொடர்ந்து விசாரித்து வருகிறோம். இந்தப்பிரச்னை தொடர்பாக மாவட்ட சுற்றுச்சூழல் மற்றும் மாசுக்கட்டுப்பாட்டு பொறியாளர், வருவாய் கோட்டாட்சியர், தொழிற்சாலைகள் ஆய்வாளர், தொழிலாளர் நல ஆய்வாளர் உள்ளிட்ட 7 அதிகாரிகள் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவினர் தங்களது அறிக்கையை ஒரு மாதத்துக்குள் தாக்கல் செய்வர். அதன்பிறகு அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும். மதிமுக பொதுச் செயலர் வைகோ மூத்த அரசியல்வாதி என்பதால் அவரை மதிக்கிறேன். இருப்பினும், அவர் கூறிய வார்த்தைகள் சரியானது அல்ல. மாவட்ட நிர்வாகம் இந்த விவகாரத்தில் சரியான நடவடிக்கையை எடுத்து வருகிறது என்றார் அவர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...