ஸ்டெர்லைட் ஆலையின் ஊதுகோலோக மாவட்ட ஆட்சியர் செயல்படுகிறார்:வைகோ
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து வெளியான கந்தக டை ஆக்சைடு வாயு மூலம் பொதுமக்கள் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த பிரச்னைக்குப் பிறகு


தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் ஆஷிஷ்குமார் ஸ்டெர்லைட் ஆலையின் ஊதுகோலாக செயல்படுகிறார் என்றார் மதிமுக பொதுச் செயலர் வைகோ.
ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி மதிமுக பொதுச் செயலர் வைகோ தலைமையில் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தோர் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.அப்போது, வைகோ அளித்த பேட்டியில்:
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து வெளியான கந்தக டை ஆக்சைடு வாயு மூலம் பொதுமக்கள் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த பிரச்னைக்குப் பிறகு மக்கள் கிளர்ந்தெழுந்துள்ளனர். ஆனால், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் வதந்திகளை நம்ப வேண்டாம் என அறிக்கை கொடுத்துள்ளார். ஸ்டெர்லைட் ஆலையின் ஊதுகோலாக மாவட்ட ஆட்சியர் செயல்படுகிறார்.ஆனால், தூத்துக்குடி மக்களுக்கு உண்மை நிலைமை தெரியும். இந்த விவகாரத்தில் அறிக்கை கொடுத்ததற்காக மாவட்ட ஆட்சியர் வருத்தம் தெரிவிக்க வேண்டும். ஸ்டெர்லைட் ஆலை நச்சு ஆலை என்பதை மக்களின் குரலாகக் கருதி அவரது கருத்தை திரும்ப பெற வேண்டும். ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடிவிட்டு அங்குள்ள தொழிலாளர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். இந்த கோரிக்கையை வலியுறுத்தி மார்ச் 28-ம் தேதி ஸ்டெர்லைட் ஆலையை முற்றுகையிடும் போராட்டத்தில் ஈடுபடுகிறோம் என்று கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...